'இது விவாதம் இல்ல.. நாட்டின் இப்போதைய தேவையே இதுதான்!'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை!’
முகப்பு > செய்திகள் > இந்தியா2014-ல் முதன்முதலாக பிரதமராகப் பதவியேற்றது முதலே ஒரே தேசம், ஒரே தேர்தல் எனும் முழக்கத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொளியில் பேசிய பிரதமர் மோடி, ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதம் அல்ல, இப்போதைக்கான தேவையே இதுதான். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் எல்லாவற்றுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார்படுத்தி நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும். அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை அப்போதுதான் மக்களுக்கு தடையின்றி செய்ய முடியும்.
நமது அரசியல் சாசன கடமைகள் குறித்து காந்தியடிகள் நிறைய குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. நமது கடமைகளைச் செய்தால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பது காந்தியின் கூற்று. நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. ஆகவே காலாவதியான சட்டங்களை அகற்றுவது எளிதாக்கப்பட வேண்டும். பழைய சட்டங்களை திருத்தம் செய்வதை இயல்பாக்க வேண்டும்” என பேசினார்.
மக்களுக்கு அரசியல் சாசன அறிவை எடுத்துச் செல்வதில் அதிகாரிகள் புதிய உத்திகளை கையாள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “பிரார்த்திக்கிறேன்!” - நிவர் புயல் தொடர்பாக தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி!
- 'ஆறு மனமே ஆறு'!.. 'போனது போச்சு... ஆக வேண்டியத பாருங்க'!.. டிரம்ப் எடுத்த அதிசய முடிவு!.. ஜோ பைடன் ஹேப்பி அண்ணாச்சி!!
- ‘நம் அனைவருக்கும்’... ‘அடுத்த ஆண்டு சிறப்பா இருக்கும்னு நம்புறேன்’... ‘ஏனெனில்’... 'கொரோனா தடுப்பூசி குறித்து’... ‘மத்திய அமைச்சர் தகவல்’...!!!
- எலெக்சனில் நிற்கும் 'பெண்' வேட்பாளர்,,.. "அவங்களோட பேர வெச்சே 'ஃபேமஸ்' ஆயிடுவாங்க போல... அது தான் மிகப் பெரிய 'ஹைலைட்'"!!!
- மு.க.ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து போட்டியா? சீமான் ‘அதிரடி’ பதில்.. பரபரக்கும் தேர்தல் களம்..!
- ‘குடும்பம் வேற, கட்சி வேற’.. தேர்தலில் அம்மாவை எதிர்த்து மகன் போட்டி.. எகிறும் எதிர்பார்ப்பு..!
- தொடர் தோல்விகளை சந்திக்கும் காங்கிரஸ்... பீகாரில் பொய்த்துப்போன தேர்தல் வியூகம்!.. என்ன காரணம்?.. 'அதிர்ச்சி' பின்னணி!
- ''இத' செய்திருந்தா டிரம்ப் தோல்வி அடைந்திருக்க மாட்டார்!.. தேர்தல் பின்னடைவுக்கு... புதிய லாஜிக் சொன்ன காங்கிரஸ் தலைவர்!.. வைரல் கருத்து!
- அதிபராகும் ஜோ பைடன்!.. இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!.. ஒரே கல்லில் 2 மாங்காய்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- “முதல் பந்தே சிக்ஸரா?”.. அமெரிக்காவின் புதிய அதிபர் ‘ஜோ பைடனின்’.. இந்தியர்கள், முஸ்லிம்கள், H1B விசா தொடர்பான முக்கிய முடிவு?