11 வயசுலயே கண்டுபிடிப்பு.. பார்வை மாற்றுத்திறனாளி சிறுவனின் பேச்சை கேட்டு வியந்துபோன பிரதமர் நரேந்திர மோடி.. வைரல் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பார்வை மாற்றுத் திறனாளியான 11 வயது சிறுவனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஸ்கூலில் நடந்த திருட்டு.. "அங்க இருந்து கெளம்புறதுக்கு முன்னாடி.." Black board-ல் திருடர்கள் எழுதிய விஷயம்.. செம வைரல்

பிரதமேஷ் சின்ஹா

இந்தியாவை சேர்ந்த பிரதமேஷ் சின்ஹா கண்பார்வை குறைபாடு கொண்டவர். 11 வயதான இவர், பார்வையில்லாதவர்கள் கல்வி கற்கும் நோக்கில், ‘Annie’ என்னும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார். இதன்மூலம் பரவலாக அறியப்பட்ட பிரதமேஷ் புதிய நிறுவனங்களை உருவாக்கும் நபர்கள் தனக்கு உத்வேகம் அளிப்பதாக கூறுகிறார். IAS ஆகவேண்டும் என்பதே தனது கனவு எனச் சொல்லும் இவர், நாட்டிற்கு சேவை செய்வது தன்னுடைய கனவு என்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 57,000 பேர் பின்தொடர்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாது, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் தன்னை விரும்புகின்றனர் என மகிழ்ச்சியோடு கூறுகிறார் பிரதமேஷ்.

டிஜிட்டல் இந்தியா

இந்நிலையில் நேற்று டிஜிட்டல் இந்தியா வீக் 2022 நிகழ்வினை இந்திய பிரதமர்  நரேந்திர மோடி பார்வையிட்டார். அப்போது திங்கர்ஸ் லேப்  நிறுவனத்தின் தூதரான சிறுவன் பிரதமேஷ் தன்னுடைய ‘Annie’ கருவியை பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, இது இயங்கும் விதம் பற்றி விளக்கிய பிரதமேஷ், இதன்மூலம் பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் எளிதில் கல்வி பயிலலாம் எனவும் தெரிவித்தார்.

இதனை ஆர்வத்தோடு கேட்டறிந்த மோடி, பிரதமேஷிடம் பல்வேறு கேள்விகளை கேட்க, அவற்றிற்கு சிறுவனும் பதில் அளித்திருக்கிறார். மேலும், பிரதமேஷ் எங்கிருந்து வருகிறார்? என்பது குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

வைரல் வீடியோ

சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை திங்கர்ஸ் லேப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில்,"கல்வியை அனைவரிடத்திலும் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் எங்களது நிறுவனம் ‘Annie’ என்னும் கருவியை உருவாக்கியுள்ளது. நம்முடைய இளம் நட்சத்திரமான பிரதமேஷ் போன்ற பல பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ‘Annie’ உதவி வருகிறது. எங்களுடைய கருவி குறித்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஆர்வத்துடன் கேட்டறிந்தது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

வீடியோவில், சிறுவனின் பேச்சை ஆர்வத்துடன் கேட்கும் மோடி, பிரதமேஷின் தலையை வருடிக்கொடுத்து அவனை பாராட்டியது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Also Read | ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்ட சிறுவன். போலீசார் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு...நன்றி சொன்ன மருத்துவர்கள்..!

PM MODI, PM NARENDRA MODI, VISUALLY IMPAIRED BOY, PM MODI MEETS VISUALLY IMPAIRED BOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்