‘நான்தான் ஒரிஜினல், அவர்தான் என்ன மாதிரி இருக்கார்’.. களத்தில் இறங்கிய மோடி போன்ற ஒத்த உருவம் கொண்டவர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் மோடியை போன்ற ஒத்த உருவம் கொண்ட முதியவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 58 வயதான அபிநந்தன் பதக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிட்டதட்ட தோற்றத்தில் இந்திய பிரதமர் மோடியைப் போல் உள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரதமரை போன்ற உடை, தாடி என அனைத்திலும் ஒரே மாதிரி இருந்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். மேலும் இவர் பாஜகவுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை போன்ற ஒத்த உருவம் உள்ளது குறித்து தனது கருத்துக்களை அபிநந்தன் பகிர்ந்துள்ளார். அதில்,‘ நான்தான் உண்மையான மோடி என நினைத்து செல்லும் இடமெல்லாம் மக்கள் அருகில் வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். பலர் நான்தான் உண்மையான மோடி என நினைத்தவர்களும் உள்ளனர். அதே நேரத்தில் அவரது வாக்குறிதிகளை கூறி என்னை விமர்சனம் செய்தவர்களும் உண்டு. கடந்தமுறை பாஜகவுக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், இந்தமுறை அந்த கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறேன். நான் அரசியலில் கடந்த 1990 -ல் இருந்தே ஈடுப்பட்டு வருகிறேன். அதனால் நான்தான் ஒரிஜினல் அவர்தான் என்னை போல் உள்ளார்’ என அபிநந்தன் பதக் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கேம் விளையாடுற மாதிரி இருக்கும்.. ஆனா இது எக்ஸர்ஸைஸ்.. வைரலாகும் விர்ச்சுவல் ஜிம்!
- ‘தாயான அடுத்த ஒரு மணி நேரத்தில்’ பெண் செய்த காரியம்.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்!
- மோடியின் அடுத்த சர்ச்சைகள்.. 73லியே மெயில், 87லியே டிஜி கேம்.. 7,8 வருஷங்கள் அட்வான்ஸா? நெட்டிசன்கள் கேள்வி!
- வாவ்.. 'இப்படி' ஒரு பொறுப்பில் இருக்கும் மகனுக்கு 'இப்படி' ஒரு அப்பாவா? குவியும் பாராட்டுக்கள்!
- “அட இந்த பட்டன அழுத்துங்கமா”!.. ‘எங்க கட்சிக்குதான் ஓட்டுபோடனும்’!.. வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!
- 'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்ஷன்? வைரல் போட்டோ!
- 'அவன் ஒண்ணும் 90% எடுக்கல... ஆனா'... வைரலாகும் தாயின் 'இன்ஸ்பிரேஷ'னல் ஃபேஸ்புக் பதிவு!
- 'கொழந்தைய காப்பாத்துங்க ப்ளீஸ்'.. 2 மணி நேரத்தில் ரெஸ்பான்ஸ்.. கொண்டாடப்படும் அமைச்சர்!
- ‘சொன்னாங்களே.. செஞ்சாங்களா?’ ஆவேசமாகக் கேட்ட அமைச்சர்.. ‘டக்குன்னு’ பல்பு கொடுத்த மக்கள்! வைரல் வீடியோ!
- “தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா? ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”?... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன?