ஆசியாவுலயே மிகப்பெரிய பிரைவேட் ஹாஸ்பிடல்.. 6000 கோடி மெகா திட்டம்.. பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ.. Bed மட்டுமே இவ்வளவா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானாவில் கட்டப்பட்டுவந்த அமிர்தா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்திருக்கிறார். இதனிடையே இந்த மருத்துவமனையில் அமைந்திருக்கும் வசதிகள் பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | கல்யாண Invitation-ஆ? இல்ல Meme-ஆ? வடிவேலு, பார்த்திபன்னனு ஒரே ரகளைதான்... அதுலயும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி அல்டிமேட்.. யாருய்யா இவரு

மாதா அமிர்தானந்தமயி

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் கட்டப்பட்ட அமிர்தா தனியார் மருத்துவமனையை நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த மருத்துவமனை மாதா அமிர்தானந்தமயி மத் என்ற தொண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும். ஆன்மீகத் தலைவரான மாதா அமிர்தானந்தமயி, அவரைப் பின்பற்றுபவர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார். தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கொச்சியில் மற்றொரு அமிர்தா மருத்துவமனை அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ மையங்களில் ஒன்றாகும். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது மருத்துவமனையை கட்டும் திட்டத்தை அவர் முன்னெடுத்தார். தான் கேரளாவில் இருந்தாலும் ஹரியானா அரசு அந்த மருத்துவமனைக்கு உருதுணையாக இருக்கும் என அவர் கூறிய நிலையில், முதல்வர் மனோகர் லால் கட்டார் இந்த மருத்துவமனையை முழுவதுமாக ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்.

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை

சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, குறைந்தபட்ச கார்பன் தடம், பூஜ்ஜிய கழிவு நீர் வெளியேற்றம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகக் கருதப்படுகிறது. கொச்சி அமிர்தா மருத்துவமனை 1998 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) கட்டப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவமனை சுகாதார உள்கட்டமைப்பிற்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என நம்பப்படுகிறது. 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டன. இங்கு அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணம்

நேற்று நடைபெற்ற துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி , ஹரியானா முதல்வர் மனோகர் லால், ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா மற்றும் மின்சாரம் மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி,"இந்த மருத்துவமனை நவீனத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் கலவையாகும். நோயாளிகள் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறும் மையமாக இந்த மருத்துவமனை திகழும்" என்றார். இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | காதல் செய்ததால் குடும்பத்தை பிரிந்த பெண்.. 56 வருஷம் கழிச்சு நடந்த எமோஷனல் சம்பவம்!!

NARENDRAMODI, HOSPITAL, AMRITA HOSPITAL, FARIDABAD, PM MODI INAUGURATES AMRITA HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்