#வீடியோ : '5,000' ரூபாய் மருந்து '1,500' ரூபாய்க்கு கிடைத்தது... இன்று 'உயிரோடு' இருக்கிறேன் என்றால் நீங்கள் தான் 'காரணம்'... 'தழுதழுத்த' பெண்... 'கலங்கிய பிரதமர்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பெண் ஒருவர், இன்று தான் உயிரோடு இருப்பதற்கு பிரதமர் தான் காரணம் என கண்ணீர் மல்க கூறியதைக் கேட்ட பிரதமர் மோடி கண்கலங்கியபடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் 6,200 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7ம் தேதி மக்கள் மருந்தக நாளாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த தீபா ஷா என்ற பெண் கண்ணீர் மல்க தனது நன்றியை பிரதமருக்குத் தெரிவித்தார்.
2011 ல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் மருந்து விலை அதிகரிப்பால் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படடார். இதன் பின்னர், பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் மருந்துகள் விலை மலிவாக கிடைத்ததையடுத்து, அவர் மீண்டு வந்த கதையை உருக்கமுடன் தெரிவித்தார்.
முன்னர், ரூ.5 ஆயிரத்திற்கு மருந்துகளை வாங்கிய தான், தற்போது இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,500 க்கு கிடைப்பதாக கூறினார்.
நான் கடவுளை பார்த்ததில்லை. ஆனால், உங்களை கடவுளின் அவதாரமாக பார்க்கிறேன் எனக் குறிப்பிட்ட அந்த பெண், உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன், என்னை பொறுத்தவரை நீங்கள் கடவுள் போல் தெரிகிறீர்கள் என உணர்ச்சி மல்க பேசினார்.
இதனைக் கேட்ட பிரதமர் மோடியும் கண்கலங்கினார். பின்னர், தழுதழுத்த குரலில் பேசிய மோடி அந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீடியோ:'போலீசாரை' சுற்றிவளைத்து தாக்கிய 'கும்பல்'... வன்முறையாளர்களின் கொலைவெறித் 'தாக்குதல்'... 'டெல்லி' கலவரக் காட்சிகளை வெளியிட்ட 'போலீசார்'...
- நிர்பயா வழக்கு: ‘4-வது முறையாக தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு’... டெல்லி நீதிமன்றம் அதிரடி!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'ட்விட்டர் அக்கவுண்ட் அட்மின் ஆக யாருக்கு வாய்ப்பு...' 'பிரதமர் மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ட்வீட்...' இது மகளிர் தின ஸ்பெஷல்...!
- 'நோ ஃபேஸ்புக்...' 'நோ ட்விட்டர்...' 'நோ இன்ஸ்டாகிராம்...' 'பிரதமர்' அதிரடி 'முடிவு'... பதிலுக்கு 'டிரெண்டிங்' ஆகும் 'நோ சார்' ஹேஸ்டேக்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'பால் வாங்க சென்ற 15 வயது சிறுவன்'... ‘அவனுக்கு ஏன் இப்டி நடக்கணும்'... 'கதறித் துடிக்கும் குடும்பம்'!
- 'சொந்த மகளா நினச்சு நடத்தி வச்சாங்க...' 'நைட் பயமா இருந்துச்சு, அவங்க மட்டும் இல்லன்னா...' டெல்லி கலவரத்தின் இடையே இஸ்லாமியர்கள் நடத்தி வைத்த இந்து திருமணம்...!
- ஒரு நீதிபதி செய்ற வேலையா இது... டபுள் மீனிங்ல... அசிங்க அசிங்கமா... நீதிபதிக்கு குட்டு வைத்த சுப்ரிம் கோர்ட்....