இஸ்ரோவுக்கு 'மோடி' போனதால தான் 'சந்திராயன்-2' வீணாப்போச்சு - முன்னாள் முதல்வர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த செப்டம்பர் 7-ம் தேதி நள்ளிரவு சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் சுமார் 2.1 கி.மீ தூரத்துக்கு முன்பே இஸ்ரோவுக்கும்-விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் சந்திராயன்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தது.
சந்திராயன்-2 நிலவில் இறங்குவதைக் காண செப்டம்பர் 6-ம் தேதி இரவு பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றார்.
இந்தநிலையில் சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''கடந்த 2008-2009-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்திராயன் 2 திட்டத்துக்கு அனுமதி கொடுத்து, அதே ஆண்டில் நிதியும் ஒதுக்கியது. தொடர்ந்து 12 வருடங்கள் போராடி விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தினர்.
ஆனால் இதற்கு பின்னால் நான் தான் இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்காக மோடி இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றார். அவர் இஸ்ரோவில் காலடி எடுத்து வைத்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்து விட்டது என நினைக்கிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாத்திரை சாப்பிட்டும் தீராத தலைவலி’.. பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- 'ஒத்த சொல்லால'...'நமீரா சலீம்' சொன்ன அந்த ஒரு வார்த்தை'...இது போதும்'...உருகிய நெட்டிசன்கள்!
- 'காரணம் ப.சிதம்பரம்தான்'.. 'மோடிஜி எனக்கு ஒரு உதவி?'.. ராணுவ விமான அதிகாரியின் உருக்கமான தற்கொலை கடிதம்!
- 'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'!
- 'ஆனாலும் எங்களுக்கு நீங்க பெரிய இன்ஸ்பிரேஷன்'.. 'அதனால'.. 'நாசாவின் புதிய அறிவிப்பு!' .. வைரல் ட்வீட்!
- 'பாஸ் கிரிக்கெட்ட ஒழுங்கா ஆடுங்க'...'அப்புறமா சந்திரயான் பத்தி பேசலாம்'...ஓட விட்ட நெட்டிசன்கள்!
- 'பீனிக்ஸ் பறவையா திரும்பி வருவீங்க'...'கதறி அழுத சிவன்'...'கட்டி அணைத்த மோடி'...உணர்ச்சி பொங்கும் வீடியோ!
- ‘இப்டிதான் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்’.. பிரமிக்க வைத்த இஸ்ரோ வெளியிட்ட வீடியோ..!
- 'முன்னாள் மத்திய நிதி அமைச்சர்'... 'அருண் ஜெட்லி' காலமானார்...எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!
- 'மனைவிய காணோம் சார்.. எங்க போனானே தெரியல'.. சகோதரருடன் சேர்ந்து கணவரின் நடுங்கவைக்கும் சம்பவம்!