பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து.. மைசூரில் பரபரப்பு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூர் அருகே விபத்திற்குள்ளாகி இருக்கிறது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் காரில் இருந்த அனைவரும் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Also Read | பனிக்குள் தெரிந்த முகம்.. அலறிய பொதுமக்கள்.. தனது பிறந்தநாளை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!
தாமோதர்தாஸ் முல்சந்த் மோடிக்கும் அவரது மனைவி ஹீராபெனுக்கும் நான்காவதாக பிறந்தவர் பிரஹலாத் மோடி. இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் ஆவார். அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரஹலாத் மோடி உள்ளார். இந்நிலையில், இன்று கர்நாடக மாநிலம் பந்திப்பூர் செல்லும் வழியில் உள்ள கடகோலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவர்களது கார் விபத்தை சந்தித்திருக்கிறது.
இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பிரஹலாத் மோடி தனது மகன், மருமகள் மற்றும் பேர குழந்தையுடன் செல்லும்போது இவர்களது கார் விபத்தை சந்தித்திருக்கிறது. விபத்தின் காரணமாக காரின் முன்பக்க வலது டயர் காணாமல் போயிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உள்ளிருந்த டிரைவர் உட்பட அனைவரும் லேசான காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, இது குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள JSS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பிரஹலாத் மோடி சென்ற பென்ஸ் கார் விபத்தை சந்தித்த இடத்துக்கு மைசூரு எஸ்பி சீமா லத்கர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார். பின்னர் அவர்களது உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்ததாக தெரிகிறது. சாலை விபத்தில் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | டெஸ்ட் மேட்சா?.. T20- யா?.. மகள்களுடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய இந்திய வீரர் ரவி அஸ்வின்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்தியாவில் கால்பந்து உலக கோப்பை நடத்துற நாளும்".. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு!!
- குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ரியாக்ஷன் என்ன?
- பிரதமர் மோடியிடம் முதன்முதலில் ஜடேஜாவை அறிமுகம் செய்துவைத்த தோனி.. உடனே பிரதமர் சொன்ன விஷயம்.. மனம் திறந்த ஜடேஜா..!
- "தோகாவலி 8 சீர்.. திருக்குறள் 7 சீர்.. ஒப்பிட்டு பார்க்க வேண்டும்".. காசி தமிழ் சங்கமத்தில் இளையராஜா பேச்சு.. ilaiyaraja kasi seepch
- கன்னியாகுமரியில் ராமானுஜர் சிலை.. காணொலி மூலம் திறந்து வைக்கும் பிரதமர் மோடி.
- "இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit
- இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கை நேரில் சந்தித்த பிரதமர் மோடி.. சுவாரஸ்ய பின்னணி!!
- "டாக்டர். இளையராஜா..".. இசைஞானிக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி.! உடனிருந்த முதல்வர் ஸ்டாலின்..!
- இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் பாரதப் பிரதமர் மோடி!.. பிரபல தமிழக பல்கலைக்கழகத்தில் விழா!
- ஹிமாச்சல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர்.! "அந்த மனசுதான் சார்..!".. நெகிழவைத்த வீடியோ.. Himachal Pradesh