அச்சுறுத்தும் ‘கொரோனாவை’ கட்டுப்படுத்த... ‘ஐடியா’ இருந்தால் ‘ஷேர்’ செய்யலாம்... ‘பரிசுத்தொகை’ அறிவித்த மத்திய அரசு...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் கூறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் பரவி கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பில் பொதுமக்களும் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள். சிறந்த தீர்வைக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

NARENDRAMODI, PMMODI, CORONAVIRUS, INDIA, SOLUTION, CONTEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்