"மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!"... ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்?... "ஊரடங்கை மீறினால்..." பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு தழுவிய ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் இன்று காலை 10 மணிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியா எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை மற்ற நாடுகள் பாராட்டி வருகின்றன. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் விட்டிருந்தால், பாதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை நான் புரிந்து கொண்டுள்ளேன். தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 21 நாள் ஊரடங்கு காரணமாகவே கொரோனாவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
எனவே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியமாகிறது. நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் பகுதிகளில் ஏப்ரல் 20க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும். ஏழை மக்களின் நலன் கருதி ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. தளர்வுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவினால், கண்டிப்புடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனிப்பு அவசியமாகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். ஊழியர்களை யாரையும் பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம். பொதுவெளியில் ஏதாவது ஒரு முகக்கவசத்தை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். Aarogya setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் நம் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இல்லங்களில்' இருந்தே மருந்துகளை பெற...' இலவச' எண் தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
- 'இந்தியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்காக'... 'கூகுள் சுந்தர் பிச்சையின் மனம் நெகிழ வைக்கும் செயல்'!
- முன்னாடியே 'இத' பண்ணியிருந்தா 'காப்பாத்தி' இருக்கலாம்... வெள்ளை மாளிகையின் 'முக்கிய' அதிகாரி 'அதிர்ச்சி' தகவல்...
- 'ஒட்டுமொத்தமாக' அதிகரித்தாலும்... '25 மாவட்டங்களில்' குறைந்துள்ள 'கொரோனா' பாதிப்பு... 'ஐசிஎம்ஆர்' தகவல்...
- கொரோனாவுக்கு 'தீர்வு' கண்ட பெண் விஞ்ஞானியை... மிரட்டி 'பணிய' வைத்ததா சீனா?... வெளியான 'புதிய' தகவல்!
- 'பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி'.. 'வீடுகளுக்குள் எறிந்து செல்லும் பெண்'!.. 'வெளியான சிசிடிவி காட்சிகள்'!
- ‘திரும்பவும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை’!
- இந்தியாவின் 'நுழைவாயில்' நகரத்தில்... கொரோனாவால் 'உயிரிழந்தவர்களின்' எண்ணிக்கை... 100 ஆக உயர்வு!
- "அமெரிக்காவுக்கு வர விருப்பமில்லை..." "இந்தியாதான் எங்களுக்கு சேஃப்..." 'அமெரிக்கா' செல்ல மறுக்கும் '24 ஆயிரம் அமெரிக்கர்கள்...'
- 'இது' இல்லாம 'வெளியே' வராதீங்க... மீறுனா 'நடவடிக்கை' எடுப்போம்: சென்னை மாநகராட்சி