22ம் தேதி-யாரும் வீட்டைவிட்டு 'வெளியே' வரவேண்டாம்... பிரதமர் மோடி 'வேண்டுகோள்'... என்ன காரணம்?... தேசத்தை திரும்பி பார்க்க வைத்த பிரதமரின் உரை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.
கொரோனா குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது,
"உங்களது சில முக்கியமான நேரம் எனக்குத் தேவைப்படுகிறது. இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. உலகப்போரை விட மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.
வரும் சில வாரங்கள் அரசுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்தவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றோருக்கு யாரும் தொந்தரவு அளிக்க வேண்டாம்."
"அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்; அலட்சியம் கூடாது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். 22ம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 22ம் தேதி கொரோனாவுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். யாரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகாதீர்கள்; யாருக்கும் நோய்த் தொற்றைப் பரப்பாதீர்கள்."
"கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியார்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம். அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். நாட்டு மக்கள் தங்களுக்கு தாங்களாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக் கொள்ள வேண்டும்."
"தேவையின்றி மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. கொரோனாவை தடுத்து நமது தேசத்தின் வலிமையை உலகத்துக்கு நிரூபிப்போம்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா - சீனாவின் உயிரியல் ஆயுதமா? (Bio weapon) அல்லது இயற்கை வைரஸா?'... உண்மையைப் போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- VIDEO: 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா!... முக்கிய செய்தி சொல்ல ஓடோடி வந்த பேத்தி!'... கண்ணாடி ஜன்னல் வழியே... கண்ணீரில் மூழ்கடித்த பாசப் போராட்டம்!
- 'மனசாட்சியே இல்லாம இப்படி பண்றீங்க'... 'அதிர்ந்து நின்ற அதிகாரி'... சென்னையில் நடந்த அதிரடி!
- 'கொரோனாவால் நிலைகுலைந்த இத்தாலியை... நெகிழ வைத்த 'பச்சிளம்' குழந்தை!'... டயபரைப் பார்த்ததும் மனமுருகிய மக்கள்!
- 'மீன் வறுவல் மட்டும் இல்ல'... 'கொரோனா பாதித்தவர்களுக்கு அசர வைக்கும் மெனு'... கலக்கும் கேரளா!
- 'கொரோனா இல்லன்னு சான்றிதழ் கொடுக்க சொல்றாங்க'...'சோகமாக நின்ற சென்னை ஊழியர்'...அமைச்சர் விளக்கம்!
- ‘கோரதாண்டவம் ஆடும் கொரோனா’.. ஆசியாவை விட பலி எண்ணிக்கை இங்கதான் அதிகம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
- ‘இப்போ அவுங்க கையில் இது இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’!
- 'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்!'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்!
- 'மாஸ்க் அணிந்து... மணம் முடித்த தம்பதி!'... கொரோனாவை அலறவிட்ட திருமணம்!