‘வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடந்த ஆலோசனை’.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் சொன்னது என்ன..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கை கடைபிடிப்பதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவால்களை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்பதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி உதவியை உறுதி செய்வதுடன் சமூக இடைவெளியை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WATCH VIDEO: 'கொரோனா ஆய்வுக்கு சென்ற மருத்துவக் குழு'... 'உள்ளூர் மக்களால் நேர்ந்த கடும் துயரம்'... '2 பெண் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ந்த பரிதாபம்'!
- 'மக்களுக்கு வந்துள்ள பீதி'... 'இத கண்டிப்பா பண்ணாதீங்க'...தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய உத்தரவு!
- ‘தமிழகம் முழுவதும் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள மாநிலமாக அறிவிப்பு!’ - மாநில சுகாதாரத்துறை!
- 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!'... நீண்ட நாள் நண்பன் பாகிஸ்தானை கைவிட்டு... இந்தியாவுடன் இணைந்த சீனா!... திசை மாறுகிறதா ஆசிய அரசியல்!?
- ‘இது ஒரு பாடம்’... ‘திடீரென உடைந்த கட்டமைப்பு’... ‘வெறுப்பூட்டும் அனுபவம்’... ‘மீண்டு வந்த இளவரசர் பகிரும் உருக்கமான வீடியோ’!
- 'இது என்ன புது தலைவலி...' இவங்களுக்கெல்லாம் 'அறிகுறிகளே இல்லை...' மீண்டும் உலகை 'பீதியில் ஆழ்த்தும்' சீனா...
- 'தொடங்கியது கொரோனா நிவாரணம்'...'தினமும் எத்தனை பேருக்கு'...'ரூ.1000 கூட என்னெல்லாம் இருக்கு'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- "தாலி கட்டுன புருஷனாவே இருந்தாலும் வீட்டுக்குள்ள வரக்கூடாது..." 'தடை விதித்த மனைவி...' 'கொரோனா குணமடைந்தாலும்...' 'விடாமல் துரத்தும் பயம்...' 'கணவனுக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'
- மக்கள் 'அடர்த்தி' நிறைந்த 'தாராவியில்'... கொரோனாவால் ஒருவர் பலியானதால் 'பரபரப்பு'... குடியிருப்புக்கு 'சீல்'...