Video: என் புருஷன 'கொன்ன' எடத்துல.. என்னையும் சுட்டு கொன்னுடுங்க.. மனைவி கண்ணீர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னுடைய கணவனை சுட்டுக்கொலை செய்த இடத்தில் தன்னையும் கொலை செய்யுமாறு சென்ன கேசவலுவின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Video: என் புருஷன 'கொன்ன' எடத்துல.. என்னையும் சுட்டு கொன்னுடுங்க.. மனைவி கண்ணீர்!

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹைதராபாத் போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். இதற்கு பெண்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தன்னுடைய கணவனின் மரணம் தொடர்பாக சென்ன கேசவலுவின் மனைவி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், '' என்னுடைய கணவன் இறந்த இடத்திற்கு என்னையும் கூட்டிச்சென்று சுட்டு கொல்லுங்கள் என போலீசாரிடம் கேட்டு கொள்கிறேன். 1 வருடத்திற்கு முன்னால் தான் எங்களுக்கு திருமணம் ஆனது. நான் இப்போது மாசமாக இருக்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

கடந்த வாரம் சின்ன கேசவலுவின் தாயார் அந்த பெண் போலவே அவனையும் போலீசார் எரித்து கொல்ல வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்