#VIDEO: “அய்யா காட்டு ராசா! உனக்காண்டிதான் இவ்ளோ தூரம்..”.. சமரசம் பேசிய வனக்காவலர்.. சாலையில் படுத்திருந்த சிங்கத்தின் ‘தெறி’ ரெஸ்பான்ஸ்! வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையின் நடுவே படுத்திருக்கும் சிங்கம் ஒன்றிடம் வனக்காவலர் ஒருவர் கெஞ்சி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குஜராத்தின் கிர் வனப் பகுதியில் வனக்காவலர் ஒருவர் தனது பணி முடிந்ததும் இரவில் வீடு திரும்பியிருக்கிறார். அவர் அவ்வாறு செல்லும் வழியில் சிங்கம் ஒன்றை எதிர்பாராத விதமாக எதிர்கொண்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

மகேஷ் சோண்டர்வா என்கிற அந்தவனக்காவலர் போகிற வழியை தடுத்து இருண்ட சாலையின் நடுவில் ஒய்யாரமாக அந்த சிங்கம் அமர்ந்திருக்கிறது.  அப்போது வீடியோ எடுத்தபடி சிங்கத்துடன் பேசும் வனக்காவலர் மகேஷ் சோண்டர்வா குஜராத்தி மொழியில் சிங்கத்திடம் கெஞ்சுகிறார்.

அவரது பேச்சுக்கு பின், அதற்கு மனம் இளகியதோ என்னவோ, அந்த சிங்கம் மெதுவாக எழுந்து சென்று காட்டுக்குள் நுழைகிறது.  இந்திய வனச் சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி டாக்டர் அன்சுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்ததை அடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்