'ஒன்னும் வேணாம்'... 'ஒங்க அரசியலுக்காக எங்கள' அவமானப்படுத்தாதீங்க ப்ளீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிளையாட்டு வீரர்களை அவமானப்படுத்துவதாக, ஹரியானா அரசு மீது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரரான வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானா அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களை கவுரவித்து, பரிசு வழங்கும் விழா ஒன்று கடந்த வாரம் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் காரணமின்றி அந்த விழா ரத்து செய்யப்பட்டதோடு, வீரர்களுக்கான பணம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹரியானாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு, அரசின் கணக்குப்படி 3 கோடி ரூபாய் அளித்திருக்கப்பட வேண்டும். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் 2.25 கோடி ரூபாய் மட்டுமே ஏறியுள்ளது. இதுகுறித்து அவர் விசாரித்தபோதுதான் முக்கியமான உண்மை தெரியவந்தது. அதன்படி, ஹரியானா அரசு விதிப்படி, ஒரு விளையாட்டு வீரர் 2-க்கும் மேற்பட்ட பதங்கங்களைப் பெற்றால், அவற்றுள் மிக உயர்ந்த பதக்கத்துக்கு முழு பணமும், அடுத்தடுத்த பதக்கங்களுக்கான ஊக்கத் தொகைகளில் பாதித் தொகை மட்டுமே அளிக்கப்படும் என்று தெரியவந்தது.
இதுகுறித்து பேசிய பஜ்ரங் பூனியா, மாற்றான் தாய் மனோபாவத்தை அரசு கொண்டுள்ளதாகவும், நாட்டுக்காக அதிக விருதுகளைக் குவிக்கும் ஹரியானா மாநிலத்தில்தான் இவ்வாறு பரிசுத் தொகை குறைக்கப்பட்டுள்ளது என்றும் வீரர்களின் மன உறுதியை உடைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல், வினேஷ் போகத் பேசும்போது, ஒரு விளையாட்டு வீரர்களாக, தேசிய-ஆசிய-ஒலிம்பிக்-உலக போட்டிகளை எல்லாம் ஒன்றாகவே தாங்கள் அனைவரும் பார்ப்பதாகவும், ஆனால் அரசு இதில் பாகுபாடு பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, அரசின் விளையாட்டுக் கொள்கையில் இருந்தே இந்த முடிவு செயல்படுத்தப்படுவதாகவும், முரண்பாடு இருந்தால் சம்மந்தப்பட்ட துறையை அணுகலாம் என்றும் கூறியுள்ளது. ஆனால் பஜ்ரங் பூனியா, ‘ஒன்றும் வேண்டாம். உங்கள் அரசியலுக்காக விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்தாமல், தயவு செய்து உங்கள் பணத்தைத் திரும்பவும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றும் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கல்யாணம் ஆன 2 -ம் நாள் காணமல் போன மனைவி’.. தேடிச் சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- 'செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்'... 'நாங்களும் தட்டிவிடுவோம்ல'!
- 'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..
- “சுங்க வரி கேட்டது ஒரு குத்தமா”!.. ‘வரி கேட்டவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பித்த நபர்’!.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- “அட இந்த பட்டன அழுத்துங்கமா”!.. ‘எங்க கட்சிக்குதான் ஓட்டுபோடனும்’!.. வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!
- 30 நிமிடங்கள் மைதானத்துக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஐபிஎல் வீரர்கள்.. ரசிகர்களிடையே பரபரப்பு.. காரணம் என்ன?