''இது' மட்டும் தான் பெரிய நம்பிக்கையா இருந்துச்சு!.. இப்போ அதுவும் சுக்கு நூறா சிதறிடிச்சு'!.. ICMR ஆய்வில் 'பகீர்' தகவல்!.. அடுத்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா உயிரிழப்புகளை குறைப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை (Plasma Therapy) பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக தொடக்கத்தில் கூறப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளில் பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டன. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா தெரபியின் பயன் தொடர்பாக ஐசிஎம்ஆரின் உயர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு நாடு முழுவதும் இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரை, 39 பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 25 நகரங்களைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மிதமாக பாதிக்கப்பட்ட 464 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பிளாஸ்மா சிகிச்சையால் உயிரிழப்புகள் குறைவதோ, கடுமையான பாதிப்பிலிருந்து மீள்வதோ ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்