"மொத்தம் 12 எடத்துல கடிச்சுருக்கு.." வளர்ப்பு நாயால் தாய்க்கு நேர்ந்த விபரீதம்.. கதறித் துடித்த மகன், கடைசியில் எடுத்த முடிவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | பத்தி எரியும் எலான் மஸ்க் - ட்விட்டர் விவகாரம்.. கூலாக ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்.. "நெத்தியடி பதில்'னா இதுதான் போல.."

மேலும் அமித் தன்னுடைய வீட்டில், பிட் புல் வகை நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். மற்ற நாய்களை விட சற்று ஆபத்து நிறைந்த இந்த பிட் புல் நாயை வீட்டில் வளர்க்க வேண்டாம் என அக்கம்பத்தினர், அமித்தை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்கள் கூறியது எதையும் கேட்காமல், பிட்புல் நாயை அமித் வளர்த்து வந்துள்ளார். மேலும் தனது நாய்க்கான உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து, அதனை சிறந்த முறையில் அமித் பராமரித்தும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், வழக்கம் போல காலையில் தனது ஜிம்முக்கும் அமித் சென்றுள்ளார். அந்த சமயத்தில், அமித்தின் தாயாரான சுசீலா திரிபாதி (வயது 82), மொட்டை மாடியில் காய போட்ட துணிகளை எடுப்பதற்காக அங்கே சென்றுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில், அவர் சற்றும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் அங்கே நிகழ்ந்துள்ளது.

தனது மகன் ஆசை ஆசையாக வளர்த்து வந்த பிட்புல் நாய், திடீரென சுசீலா மீது பாய்ந்து அவரது முகம், கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதியில் கடித்து வைத்ததாக கூறப்படுகிறது. இதன் பெயரில், வலி தாங்க முடியாமலும் சுசீலா அலறி துடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக அவரது வீட்டின் அருகே உள்ள வீடுகளில் யாரும் இல்லாததால், உதவிக்கு கூட உடனே யாரும் வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், பிற்பகல் 11 மணிக்கு மேல் வீடு திரும்பியுள்ளார் அமித். அப்போது வீட்டில் இல்லாத தனது தாய் சுசீலாவை தேடி, மொட்டை மாடிக்கு சென்ற அமித்திற்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ரத்த வெள்ளத்தில் ஒரு பக்கம் தாய் கிடக்க, மறுபக்கம் பிட்புல் நாய் அமர்ந்திருப்பதையும் அவர் பார்த்து கதறி துடித்துள்ளார்.

உடனடியாக, தனது தாய் சுசீலாவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார் அமித். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

தான் செல்லமாக வளர்த்து வந்த நாயே தனது தாயாரின் உயிர் போக காரணமாக இருந்ததால், கதறி அழுதார் அமித். பின்னர், தனது தாயின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு, தனது நாயையும் மாநகராட்சி வேனில் ஏற்றி விட்டார்.

Also Read | "எவ்ளோ நாள் ஆச்சு இவங்கள இப்டி பாத்து!!.." லண்டனில் மீட் செய்த தல, சின்ன தல.. "கண்ணே பட்டுடும் போல"

PITBULL DOG, BITE, OLD WOMAN, UTTAR PRADESH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்