'கை இல்லனா என்ன தம்பி'...'நெகிழ வைத்த முதலமைச்சர்'...சல்யூட் போடவைத்த முதல்வரின் செல்ஃபி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னை சந்திக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை  கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்திய விதம் பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது.

கேரள முதல்வர் தனது மனிதநேய மிக்க செயல்பாடுகளால், பலமுறை பல்வேறு தரப்பட்ட மக்களை நெகிழ செய்துள்ளார். அது போன்ற ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் முதலவர்  பினராயி விஜயனை சந்திப்பதற்காக  பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று வந்திருந்தார். இரு கைகளையும் இழந்த அவரை முதலவர் உடனடியாக சந்தித்தார். இருவர் சந்தித்து கொள்ளும் போது கைகுலுக்கி கொள்வது மரபு. ஆனால் கைகளை இழந்த பிரணவால் முடியாது என்ற நிலையில், பினராயி விஜயன் தன் கையால் பிரணவின் கால்களைப் பிடித்து கைகுலுக்கிக்கொண்டார்.

இதையடுத்து ரணவ் தன் காலால் கொடுத்த மனுவையும் பேரிடர் நிவாரண நிதியையும் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். பின்னர் முதல்வருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட பிரணவ் தன் காலால் மொபைலைப் பிடித்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து கேரள முதலவர் பினராயி விஜயன், தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தது முதலே கைகளை இழந்த பிரணவ், தன் பணிகளைக் கால்களால் செய்துகொள்ள பழகிக்கொண்டார். மாற்றுத்திறனாளி இளைஞரை கேரள முதல்வர் நடத்திய விதம் பலரையும் நெகிழ செய்துள்ளது. அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

KERALA, PINARAYIVIJAYAN, PRANAV, PHYSICALLY CHALLENGED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்