'ஒரே ஒரு செகண்ட் தான்' ... 'தீ பிடித்த விமானத்தின் பரபரப்பு நிமிடங்கள்'... வைரலாகும் வீடியோ !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பறவை மோதியதால் தீ பிடித்த விமானத்தை விமானி சாதுரியமாக தரையிறங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது. இதனால் விமானத்தின் இன்ஜின் செயலிழந்தது. விபரீதத்தை புரிந்து கொண்ட விமானி, உடனடியாக விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்குகளையும், சிறிய வெடிகுண்டையும் தனது கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்தி கழன்று விழச் செய்தார்.

இதனிடையே இந்த சம்பவம் விமானம் பால்தேவ் நகர விமான படை தளத்தின் அருகில் நடந்தாலும், அதன் அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருந்தால், விமானத்தில் இருந்து விழுந்த சில பொருட்கள் குடியிருப்புகள் மீதும், சாலையிலும் விழுந்தது. இதையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த விமான படை அதிகாரிகள், சிறு குண்டுகள் வேறு எங்காவது விழுந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

FLIGHT, ACCIDENT, IAF, INDIAN AIR FORCE, JAGUAR AIRCRAFT, CARRIER BOMB LIGHT STORES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்