காலில் சீன 'Tag' உடன் புறாவா?.. பெரிய ஸ்கெட்ச்சா? பீதியில் மக்கள்! உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீன டேக் போன்றதொரு கால் கட்டு உடன் புறா ஒன்று சுற்றி வந்ததை அடுத்து அது சீனாவில் உளவு புறாவாக இருக்குமோ என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

தெலங்கானாவில் பிரகாசம் மாவட்டத்தில் கம்மம் என்ற ஊரில் காலில் மஞ்சள் நிற டேக் உடன் புறா ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. சில குடியிருப்பு வாசிகள் இதுகுறித்த தகவலை ஊர் பஞ்சாயத்துக்குத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம், அந்த புறாவின் டேக் பகுதியில் சீன எழுத்துகள் போல ஏதோ எழுத்துக்கள் அச்சிடப்பட்டு இருந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அது சீனாவிந் உளவு புறாவாக இருக்குமோ என அச்சப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீஸாரும் அந்தப் புறாவை பிடித்து அதன் மேல் ஏதேணும் சிப் அல்லது ஏதேணும் எலெக்ட்ரானிக் சென்சார்கள் எதுவும் உள்ளதா என்பதைப் பரிசோதித்துப் பார்த்தனர்.

அப்படி எதுவும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இதனால், போலீஸார் சந்தேகத்தின் பெயரில் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் வந்து அந்த புறாவை சோதித்துப் பார்த்தனர். சீனாவில் இருந்து ஒரு புறா இவ்வளவு தூரம் பறந்து வர வாய்ப்பு இல்லை என்றே வனத்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த புறா குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்தப் புறா சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த புறா ரேஸ் விடும் மையம் ஒன்றைச் சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது. இதேபோல், சில நாட்களுக்கு முன்னர் இதே பிரகாசம் மாவட்டத்தில் சீமகூர்த்தி என்னும் கிராமத்தில் இதே போன்ற டேக் ஒன்று புறா ஒன்று சுற்றித் திரிந்துள்ளதும் புகார் ஆகக் கொடுக்கப்பட்டது.

TELANGANA, சீன டேக், உளவு புறா, CHINESE TAG, SPY PIGEON, RACE PIGEON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்