கையில லேப்டாப், பைக்'ல Travel.. WFH-ஆ.?." - இணையத்தில் வைரல் ஆகும் ஃபோட்டோவால் சலசலப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்றிற்கான பிந்தைய காலகட்டம் என்பது, பெரும்பாலும் வீட்டிலிருந்த படியே பணி செய்ய வேண்டும் என்ற நிலையும் உருவானது.

Advertising
>
Advertising

Also Read | "நித்யானந்தா மாதிரி இருக்கா?.." 18 அடி சிலைக்கு கும்பாபிஷேகம்??... கடும் குழப்பத்தில் பக்தர்கள்

அதன்படி, பல முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் கூட இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், பேருந்து, ரெயில் உள்ளிட்ட இடங்களில் லேப்டாப்பை வைத்து பலரும் பணிபுரிந்து வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், சாலை ஒன்றில் இளைஞர் ஒருவர், பைக்கில் அமர்ந்த படி ஒரு புறம் லேப்டாப்பை வைத்துக் கொண்டு பயன்படுத்திய படி செல்லும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

கையில லேப், பைக்'ல 'Travel'

இது தொடர்பான புகைப்படம் ஒன்றை, லிங்க்டு இன் பயனாளி ஒருவர் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது கேப்ஷனில், "பெங்களூரு சிறந்ததாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா?. இரவு 11 மணிக்கு, பெங்களூருவின் மிக பிஸியான மேம்பாலம் ஒன்றில், பைக்கில் இருந்த படியே லேப்டாப்பில் ஒருவர் வேலை செய்தபடி செல்கிறார். ஒரு Boss ஆக நீங்கள் இருந்து கொண்டு, உங்களின் சக ஊழியர்களின் பாதுகாப்பினை விலையாக கொடுத்து தான், அவர்களுக்கான வேலையை முடிக்கும் படி நீங்கள் பயமுறுத்தினால், அது பற்றி நீங்கள் மீண்டும் சிந்திப்பதற்கான நேரமும் இது தான்.

முக்கியமாக நீங்கள் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் போது, 'It's Urgent' மற்றும் 'Do it ASAP' உள்ளிட்ட வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு  கீழே பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், இது பற்றி நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த பதிவுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், மற்ற சிலர், அவர் ஆபீஸ் வேலையை மட்டுமே பார்த்திருக்க வாய்ப்பு இருக்காது என்றும், ஒரு வேளை பஸ் அல்லது ரெயில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்டவற்றை பற்றிக் கூட அவசரமாக பார்த்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், மேம்பாலம் ஒன்றில் இரவு நேரத்தில் லேப்டாப்புடன் பயணம் செய்த இளைஞரின் புகைப்படம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | மொத்தமா 3,800 டன் எடை கட்டிடம்.. "அப்படியே அலேக்கா தூக்கி மாத்தி வச்சுடலாமா??.." கோதாவில் இறங்கிய பொறியாளர்கள்.. சீனாவில் அதிசயம்

BANGALORE, MAN, WORK, LAPTOP, MAN WORKING WITH LAPTOP ON BIKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்