"கூகுள் சொல்றபடிதான் வைத்தியம் பார்க்கணும்னா"...போஸ்டர் ஒட்டிய டாக்டர்.. யாரு சாமி இவரு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூகுள் மூலம் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி அதனால் குழப்பமடைபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மருத்துவர் ஒருவர் நோட்டீஸ் ஒட்டியதாக சொல்லப்படும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இணைய வசதி பெருகிவிட்ட காலத்தில், பல்வேறு வகையில் மனிதர்களின் அறிவை விரிவு செய்ய இணையம் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட தேடல்கள், அலைச்சல் என உடல் அளவிலும் மனதளவிலும் நம்மை ஆரோக்கியமாக்க இந்த தேடல்கள் உதவுகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலகின் மற்றொரு மூலையில் இருப்பவரிடம் கூட நம்மால் நொடிப் பொழுதில் தொடர்புகொண்டு பேசிவிட முடிகிறது.

இப்படி பல்வேறு கொடைகளை மனித குலத்திற்கு அளித்திருக்கிறது இணையம். பயனாளர்கள் அளிக்கும் தரவுகளை சேகரித்து வைத்திருக்கும் பிரம்மாண்ட கிடங்கு அது. ஆனால், இணையத்தில் உடல் சார்ந்த சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சந்தேகம் சந்தேகம்

உதாரணமாக சாதாரண ஜலதோஷம் அல்லது காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அப்போது அதற்குரிய நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சென்று உரிய ஆலோசனையை பெறவேண்டும். அதைவிடுத்து பெரும்பாலான மக்கள் உடனடியாக கூகுளில் தங்களுடைய உடல் உபாதைகளை குறிப்பிட்டு தேடுகிறார்கள். இதனால் தேவையற்ற மன உளைச்சலும் உடல் பற்றிய அச்சமும் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

வித்தியாசமான போஸ்டர்

இந்நிலையில், மருத்துவர் ஒருவர் கூகுளின் மூலமாக எழும் உடல் சார்ந்த சந்தேகங்களுக்கு சிகிச்சையளிக்க 1000 ரூபாய் வசூலிக்கப்படும் என போஸ்டர் ஒட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்த போஸ்டரில் மருத்துவர்," நானே பரிசோதனை செய்து, சிகிச்சையளிக்க 200 ரூபாய், நான் பரிசோதனை செய்து நீங்கள் விரும்பியபடி சிகிச்சையளிக்க 500 ரூபாய், உங்களது கூகுள் சந்தேகங்களுக்கு 1000 ரூபாய், நீங்களே பரிசோதனை செய்து , நான் சிகிச்சையளிக்க 1,500 ரூபாய், நீங்களே பரிசோதனை செய்து, நீங்கள் சொல்லும்படி சிகிச்சையளிக்க 2000 ரூபாயும் வசூலிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

இது எந்த மருத்துவமனையில் எந்த மருத்துவரால் ஒட்டப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த போஸ்டரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வருகின்றன.

GOOGLE, DOCTOR, FEES, கூகுள், மருத்துவர், சந்தேகம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்