காதலனை கரம்பிடிக்க பிலிப்பைன்ஸ்-ல் இருந்து கேரளா வந்த பெண்..கல்யாணமாகி 10 நாள்ல நடந்த பெரும் சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கேரளாவை சேர்ந்த தனது காதலனை கரம்பிடித்த நிலையில் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலையடைய செய்துள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹாரிஸ். மருத்துவ துறையில் பணிபுரிந்துவரும் இவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேச்சல் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. நண்பர்களாக பழகிவந்த இருவரும், ஒருகட்டத்தில் காதலிக்க துவங்கியுள்ளனர். 3 ஆண்டுகளாக காதலித்துவந்த இருவரும் திருணம்  முடிவெடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இதற்காக ரேச்சல் பெங்களூரு வந்திருக்கிறார்.

திருமணம்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் ஹாரிஸ் மற்றும் ரேச்சல் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். பெங்களூருவில் கணவன் மனைவியாக வசித்துவந்த இருவரும், எர்ணாகுளம் கிளம்பி சென்றிருக்கிறார்கள். தனது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என ரேச்சல் கூறியதாக தெரிகிறது. இதனால் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை உறவினர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார் ஹாரிஸ்.  இந்நிலையில் இருவரும் இன்று காலையில் எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளனர். அப்போது ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன் ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டு வந்த ரேச்சல் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

சோகம்

இதனால் அதிர்ச்சியடைந்த ஹாரிஸ், ஓமலூர் ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். அப்போது, ரேச்சல் 50 அடி பள்ளத்தில் விழுந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததால், இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி  சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 10 நாட்களில் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து ஹாரிஸிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PHILIPPINES, WOMEN, MARRIAGE, பிலிப்பைன்ஸ், காதல், திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்