“என்ன பெரிய புதிய வகை கொரோனா வைரஸ்!... இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவே போதும்!” - ஜெர்மனி சுகாதாரத் துறை அமைச்சர் ‘அதிரடி!’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனா வைரஸை  கட்டுப்படுத்தும் என  கூறியுள்ளார்.

பிரிட்டனில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டனில் தற்போது உருமாற்றத் திரிபு அடைந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவதாகவும், இந்த வைரஸ் பழைய கொரானா வைரஸை விட மிக வேகமாக பரவி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டது. 

இதனையடுத்து பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இம்முறை, இந்த புதிய ரக கொரோனா வைரஸ் பரவல் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn, இதுகுறித்து பேசும்போது, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (Pfizer-BioNTech vaccine) தடுப்பூசிகளே, தற்போதைய புதிய ரக உருமாற்றம் அடைந்த கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய யூனியனில் உள்ள சுகாதாரத் துறை விஞ்ஞானிகள் நம்புவதாக கூறியுள்ளார்.

ALSO READ:‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி! .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா?’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன?

மேலும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பயன்பாட்டிலுள்ள ஃபைசர் தடுப்பூசியில், எந்தத் தாக்கத்தையும் இதுவரை நமக்கு கிடைத்த தகவலின்படி  ஏற்படுத்தவில்லை. ஆகவே, தற்போதுள்ள இந்த தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரசையும் கட்டுப்படுத்த வல்லவை என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்