'இரண்டு டோஸ் மட்டும் போதாது'... '12 மாசம் கழிச்சு'... ஃபைஸர் தடுப்பூசி நிறுவனம் முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் 98 நாடுகளில் பரவிவிட்டது.

கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை பல நாடுகளுக்கும் விடப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேலும் விதிவிலக்கில்லை. 57% மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியையும் இஸ்ரேல் போட்டுவிட்டது. இதனால், கடந்த ஜூன் தொடக்கத்திலிருந்தே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அந்நாடு அறிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேலில் இப்போது கொரோனா திரிபு டெல்டா வகை வைரஸ் பரவிவருகிறது. இந்நிலையில் ஜூன் 6ல் ஊரடங்கில் மிகப்பெரிய தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தடுப்பூசி 94% பாதுகாப்பையும், தளர்வுக்குப் பின்னர் 64% பாதுகாப்பையும் நல்குவதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

இந்நிலையில் ஃபைஸர் தடுப்பூசி டெல்டா திரிபால் தீவிர நோய்ப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேல் அரசு, கொரோனாவால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை முன்பு 97% ஆக இருந்தது. தற்போது 93% ஆகக் குறைந்துள்ளது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பைஸர் தடுப்பூசி நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் 12 மாதங்களுக்கு அப்புறம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் முழுமையான பாதுகாப்பைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்