மன்னிச்சிடுங்க...! பார்சலுக்குள்ள 'என்ன இருக்குன்னு' தெரியாம திருடிட்டேன்...! பார்சல பிரிச்சு பார்த்தப்போ 'உள்மனசு' குத்திடுச்சு...! - நெகிழ வைத்த திருடன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி ஊசிகளை திருடிய நபர் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வடமாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட  நபர்கள் படும் அவதி குறித்த வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கிறது.

மேலும் தற்போது ஹரியானா மாநிலத்திலும் கொரோனா தாக்கம் அதிகளவில் இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து களவு போவது சகஜமாகி வருகிறது. இதன்காரணமாக அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் ஒருவர் 1,700 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி பையைத் திருடியுள்ளார். அதன் பின் மனம் திருந்திய திருடர் தடுப்பூசியை மீண்டும் உரிய இடத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்தப்பையின் உள்ளே ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அதில், 'உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியாமல் திருடி விட்டேன் மன்னிக்கவும்' என்று குறிப்பையும் எழுதி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு அருகே இருக்கும் தேநீர் கடையில் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடனை தேடி வருகின்றனர். மேலும் தடுப்பூசி பையை திருடிய நபர் போலீஸாருக்கு உணவு கொடுக்க வந்தவன் என்றும் தான் வேறு இடத்துக்குப் போக வேண்டியிருப்பதால் இதை ஒப்படைக்குமாறு தேநீர் கடை க்காரரிடம் கூறியுள்ளான்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை விட இந்த முறை, கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,263 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்