'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜிஎஸ்டி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களை நிபந்தனைகளின்றி கைது செய்யலாம் என்றும், அவர்களுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தெலுங்கானா உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி, சரக்கு மற்றும் சேவை வரி கட்டுவதில் ஏய்ப்பு செய்பவர்களுக்கு தயவு தாட்சயண்யமின்றி இடைக்கால நிவாரணங்கள் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தது.
முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட சில வழக்குகளில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) இல்லாததாலேயே அந்த வழக்குகளில் சிக்கியவர்களைக் கைது செய்யாமல் விசாரித்து வந்தது. ஒரு கட்டத்தில் அதில் பலரும் அவ்வழக்குகளில் இருந்து விடுவிக்கவும் பட்டனர்.
காரணம், காவல்துறையைப் போன்று எடுத்ததும் ஜிஎஸ்டி ஆணையர்களால் ஏய்ப்பு செய்பவர்கள் மீதான நேரடி நடவடிக்கைகளை துரித காலத்தில் எடுக்க முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில், தெலுங்கானா நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை மற்றும் கோரிக்கையை ஏற்றது உச்சநிதிமன்றம்.
அதன்படி, எவ்வித FIR-ம் ஒருவர் மீது இல்லாமலே, அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவரை நிபந்தனைகளின்றி கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜிஎஸ்டி ஆணையர்கள் மேற்கொள்ளலாம் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செல்லாது.. செல்லாது..' 2 வருஷத்துக்கு பின் ரயில்வேயிடம் இருந்து 33 ரூபாயை திரும்பப் பெற்ற இளைஞர்!
- 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு'... 7 பேர் விடுதலையை எதிர்த்து மனு... 'உச்சநீதிமன்றம்' அதிரடி!
- ‘தல’யவே ஏமாத்திட்டாய்ங்களா.. எடு ரூ.40 கோடிய.. தனியார் நிறுவனத்தை பதறவைக்கும் தோனியின் பிரில்லியண்ட் மூவ்!
- ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கு.. நீதிபதிகள் குழு விசாரணை எப்போது?
- தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு.. 'நீதித்துறைக்கு கடும் அச்சுறுத்தல்'!
- டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- மீண்டும் களத்தில் பொன். மாணிக்கவேல்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- ரஃபேல் வழக்கு: மத்திய அரசு கோரிக்கை.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- தஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு!
- ரஃபேல் விவகாரம் தொடர்பான ‘முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன’.. மத்திய அரசு!