#Breaking: பேரறிவாளன் விடுதலை வழக்கு.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடுத்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
Also Read | "ஒழுங்கா சேலை கட்டத் தெரியல".. மனைவி மீது வந்த கோபம்.. லெட்டர் எழுதி வச்சுட்டு கணவர் செஞ்ச விபரீத காரியம்..!
பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனுக்கு முன்னர் உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு விடுதலை அளிக்கவேண்டும் என பேரறிவாளன் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். மேலும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விசாரணை நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் அடங்கிய அமர்வில் நடைபெற்று, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
விடுதலை
இந்நிலையில், பேரறிவாளனின் விடுதலை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த சில வாரங்களாக வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி விசாரணை முடிந்தது.
இதனிடையே இன்று, பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதனால் 31 ஆண்டு சிறைவாசம் முடிந்து விடுதலை பெற்றிருக்கிறார் பேரறிவாளன்.
உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதாகவும் அதனால் உச்ச நீதிமன்றமே இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டுகால சிறை வாசத்திற்கு பின்னர் தற்போது விடுதலையான சம்பவம் குறித்து மக்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
- 30 வருடத்துக்கும் மேல் சிறைவாசம்.. முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!
- முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்- நீதிமன்றம் உத்தரவு
- "சொந்தக்காரங்களை துன்புறுத்துறாங்க..." ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்டில் அவசரமாக புதிய மனு!
- ‘ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய?’.. அற்புதம் அம்மாள் வேதனை பதிவு..!
- 'குற்றம் செய்யாம 30 வருஷமா ஜெயில்ல'.. 'தாயின் 30 வருட போராட்டம்'.. ‘ரஜினி’ பட இளம் இயக்குநரின் ‘உருக்கமான கோரிக்கை!’
- 'ஏழு பேர் விடுதலை'... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பு!
- ‘இதுவே கடைசி போராட்டமா இருக்கணும்’:எழுவர் விடுதலைக்காக போராட்டத்தில் இறங்கும் இயக்குநர்கள்!