மே 18-ல் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன்.. செய்தியாளர்களிடம் பேசிய முதல் வார்த்தை..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | #Breaking: பேரறிவாளன் விடுதலை வழக்கு.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

பேரறிவாளன்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 1971 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி பிறந்தார். இவருடைய பெற்றோர் குயில்தாசன் - அற்புதம்மாள் ஆவர். 1991 ஆம் ஆண்டு மே 21-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில், 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 வயதான பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பேட்டரிகள் வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 1998 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு உட்சபட்ச தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தண்டனை குறைப்பு

அதன்பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 பேருடைய மேல்முறையீட்டினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு அவர்களை விடுதலை செய்தது. இருப்பினும் பேரறிவாளன், நளினி, முருகன் மற்றும் சாந்தனுக்கு உச்சபட்ச தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட உட்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதனிடையே பேரறிவாளன் மற்றும் 3 பேர் அனுப்பிய கருணை மனு பரிசீலிக்கப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டி 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உட்சபட்ச தண்டனையை ஆயுள் தண்டனையாக  குறைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

விடுதலை மனு

அதன்பிறகு 2018 செப்டம்பரில் தமிழக சட்டசபையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனாலும், இவர்களின் விடுதலை தாமதமானது. இதனிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் பேரறிவாளன்.

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் அடங்கிய அமர்வில் நடைபெற்று, பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கப்பட்டது.

சுதந்திர காற்று

பேரறிவாளனின் விடுதலை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த சில வாரங்களாக வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி விசாரணை முடிந்தது.

இதனிடையே இன்று, பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். தமிழர்களால் என்றென்றும் மறக்க முடியாத மே 18 ஆம் தேதியில் (இன்று) பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

நியாயம் எங்கள் பக்கம் இருந்தது

விடுதலை தீர்ப்பு வெளிவந்த பின்னர் தனது குடும்பத்தினரை சந்தித்து கண்ணீருடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பேரறிவாளன் செய்தியாளர்களை சந்தித்தபோது,"ஆரம்ப காலங்களில் என் அம்மா நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார். நிறைய போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. நீதி இருந்தது. அதுதான் எங்களுக்கு இந்த போராட்டத்திற்கான வலிமையை கொடுத்தது என்று நான் கூறுவேன். அதுதான் எங்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. என் தாயுடைய மகத்தான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. எனக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்த என்னுடைய குடும்பத்தார் மற்றும் மக்களுக்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் தியாகம், தியாகராஜன் IPSன் வாக்குமூலம், நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் அவர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நன்றிகள்" என உருக்கமாக பேசினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டுகால சிறை வாசத்திற்கு பின்னர் தற்போது விடுதலையானது குறித்து இந்தியாவே பரபரப்புடன் பேசிவருகிறது

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

PERARIVALAN, PERARIVALAN RELEASE UPDATES, PERARIVALAN FIRST SPEECH, SUPREME COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்