'ஏழு பேர் விடுதலை'... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பேரறிவாளன் உட்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் 7 பேரின் விடுதலை குறித்துப் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  “காலதாமதமின்றி ஏழு பேரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது, ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏழு பேர் விடுதலை தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ள சூழலில், தமிழக சட்டத்துறை அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே 7 பேரின் விடுதலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்