'கைத்தட்டி' பாராட்ட சொன்னா... 'ஊர்வலமா' போறாங்க... உங்கள வச்சுக்கிட்டு 'ஒண்ணும்' பண்ண முடியாது... 'சுய ஊரடங்கின்' நோக்கத்தையே 'சிதச்சுட்டாங்க'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேற்றைய சுயஊரடங்கின் போது மாலை 5 மணிக்கு சேவைத் துறையினருக்கு கைதட்டி நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் வட மாநிலத்தில் சிலர் கும்பலாக ஊர்வலம் சென்று கைத்தட்டி ஆட்டம், பாட்டம் என ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள், இது வைரஸ் பரவலை அதிகப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, மக்கள் சுய ஊரடங்கு மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை சரியாக 5 மணிக்கு சேவைத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கைத்தட்டியும், தட்டுகளை தட்டியும் ஒலி எழுப்புமாறு பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனை தவறாக புரிந்து கொண்ட வடமாநிலங்களை சேர்ந்த பலர் கைத்தட்டியும், தட்டுகளை தட்டியவாறும் ஊர்வலமாக சென்று, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CORONA, NORTHERNS, P.M., MISUNDERSTOOD, PROCESSION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்