மதுக்கடைகளை திறந்த ‘மாநிலம்’.. கட்டுக்கடங்காமல் குவிந்த ‘குடிமகன்கள்’.. காற்றில் பறந்த ‘சமூக இடைவெளி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதனை அடுத்து டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள சுமார் 150 மதுக்கடைகளை திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலை காலை டெல்லியின் மாளவியா நகரில் உள்ல ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் வரிசையாக நின்றுகொண்டிருந்த மக்கள், அடுத்த நொடியே கடைக்கு முன் கூடினர். உடனே கடையின் உரிமையாளர் போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்தார்.
இதேபோல் சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்படுத்தப்படுத்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. பல இடங்களில் மதுபானை கடைக்கு வெளியே சமூக இடைவெளியை பின்பற்ற வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால் ராஜ்ந்நதகோன் என்ற இடத்தில் மதுக்கடையை திறந்தவுடன் ஏராளாமான மக்கள் குவிந்தனர். இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை காற்றில் பறந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒருவேளை ‘சாப்பாட்டுக்காக’ 4கிமீ வெயிலில் காத்திருந்த மக்கள்.. ‘இந்த நாட்டுக்கு இப்டியொரு சோதனையா’!.. கலங்க வைத்த ட்ரோன் வீடியோ..!
- ‘பிளாஸ்மா தெரபி மூலம்’... ‘பூரண குணமடைந்த முதல் இந்தியர்’... ‘12 நாளில் வென்டிலேட்டரில் இருந்து ஹோம் க்வாரன்டைன்’... ‘மருத்துவர்கள் சாதித்தது எப்படி?’...
- "ஊரடங்கை நீட்டிக்கணும்"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன?
- 'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்!
- 'அணியில் நிராகரிக்கப்பட்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'
- 'கைகொடுத்தது பிளாஸ்மா சிகிச்சை...' 'டெல்லியில்' குணமடைந்த '49 வயது' நபர்... 'இந்தியாவில் முதல் வெற்றி...'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- சென்னையில் பரபரப்பு... கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்!... உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு!.. என்ன நடந்தது?
- ‘பசிக்கு தண்ணிய குடிச்சுட்டு இருக்கும்’.. குழந்தைங்க ‘பசிக்குதுனு’ அழுறாங்க.. ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்..!
- ‘பசிய போக்க வேற வழி தெரியல’.. ‘அழுகிய’ வாழைப்பழத்தை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. கலங்க வைத்த வீடியோ..!