ATM -ல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. 500 ரூபாய் பணம் எடுக்க போனவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் ஷாக்.. கொஞ்ச நேரத்துல திரண்டுவந்த மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட்ட தொகையை விட 5 மடங்கு அதிக பணத்தை ATM இயந்திரம் வெளியிட்டதால் பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணம் எடுக்க சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அடுத்தடுத்து வாட்சாப் நிறுவனம் வெளியிட்ட அப்டேட்...நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறியதால் உற்சாகத்தில் பயனர்கள்..!

சர்ப்ரைஸ் ஷாக்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கபர்கெடா நகரம். இங்கு அமைந்துள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ATM க்கு பணம் எடுக்க சென்றிருக்கிறார் உள்ளூர் நபர் ஒருவர். வழக்கம்போல கார்டை உள்ளிட்டு தனது ரகசிய இலக்க என்னை என்டர் செய்து 500ரூ Cash Withdraw செய்துள்ளார். சற்று நேரம் காத்திருந்த அந்த நபருக்கு அடுத்து நடந்த சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்திருக்கிறது. காரணம் ATM இயந்திரத்தில் இருந்து 2500 ரூபாய் வெளியே வந்திருக்கிறது.

தான் குறிப்பிட்ட தொகையை விட 5 மடங்கு தொகை கிடைத்ததால் ஷாக் ஆன அந்த நபர், மீண்டும் அதேபோல பணம் எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்போதும் அவருக்கு 500 ரூபாய்க்கு பதிலாக 2500 ரூபாய் கிடைத்திருக்கிறது. கொஞ்ச நேரத்தில் இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த நகரம் முழுவதும் பரவ, ATM ல் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கிறது.

புகார்

இந்நிலையில், ATM ல் குறிப்பிட்டதை விட ஐந்து மடங்கு அதிக தொகை வந்த சம்பவம் தீயாய் பரவ, இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ATM அமைந்துள்ள இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளுடன் வந்தனர். அதன்பின்னர் உடனடியாக அந்த ATM மூடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் பேசுகையில்,"ATM இயந்திரத்தில் 100 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில 500 ரூபாய் நோட்டுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது" எனத் தெரிவித்தனர்.

விசாரணை

ATM இயந்திரத்தில் ஐந்து மடங்கு அதிக தொகை வருவதாக தகவல் கேட்டு ஓடிவந்த மக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி, அந்த மையத்தினை மூடியுள்ளனர் அதிகாரிகள். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என கபர்கெடா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read | கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு ரன் யாரும் அடிச்சதில்லை.. 49 பவுண்டரிகள்.. ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பார்வையற்ற ஆஸி. வீரர்..!

MAHARASHTRA, ATM, ATM MACHINE, PEOPLE RUSH TO WITHDRAW MONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்