'அந்த இரண்டும் சவாலானது’... ‘கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்’... ‘மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை. மத்திய அரசு கடந்த 1-ந்தேதியில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனுமதி அளித்தது. அதேவேளையில் கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது, ‘நாம் ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது ஆகிய இரண்டு பணிகளை பற்றி பேசி வருகிறோம்.
இரண்டும் மிகவும் சவாலானது. அதனால் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது வழிகாட்டுமுறைகள் மிகமிக முக்கியம். வைரஸிலிருந்து தன்னைத்தானே ஒருவர் காப்பாற்றிக்கொள்ள, சமூக பழக்க வழக்க மாற்றத்தை பின்பற்ற வேண்டும். இது மிகப்பெரிய சவால். இதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது’ என லாவ் அகர்வால் கூறினார்.
மேலும், இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்று கூறியதுடன், கொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான'... 'பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு'... ‘தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து வெளியான தகவல்’!
- ஊரடங்கு முடிந்த பிறகு... 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் நடத்தலாம்!... மத்திய அரசு அதிரடி திட்டம்!
- உலகிலேயே 'அதிக' இழப்பு 'இவருக்கு' தான்... 'கொரோனா' முடக்கத்தால்... 'பில்லியனருக்கு' ஏற்பட்ட 'பெரும்' பாதிப்பு...
- மது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!.. மாநில அரசுகள் பின்பற்றுமா?
- 'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'!
- கடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...
- “கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க!”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்!
- திரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...
- 'தி.நகரில் பரிதாபம்'...'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க'... 'புரோடக்சன் மேனேஜர் செய்த விபரீதம்'... சென்னைவாசிகளை அதிரவைத்துள்ள சம்பவம்!
- சட்டென '75 ஆயிரத்தை' கடந்த 'பலி' எண்ணிக்கை... 'நடுநடுங்கிப்'போய் நிற்கும் நாடு!