மாத சம்பளம் வாங்குவோருக்கு குட்நியூஸ்.. ரூ.9000 வரை பென்சன் உயரலாம்.. முழு விவரம் இதோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதேசிய பென்சன் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கென 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். அதனை தொடர்ந்து இத்திட்டம் 2009ஆம் ஆண்டில் அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களாக இருந்தாலும், வேறு எந்த தனியார் நிறுவனமாக இருந்தாலும், இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிடுவதற்கு ஒரு வரம்பு உள்ளது.
அவை பின் வருமாறு:
தேசிய பென்சன் திட்டத்தில் 3 ஆண்டுகளில் பணம் எடுக்கலாம்.
முதலீட்டாளர்கள் தங்களது பங்களிப்பில் 25 சதவீதத்தை மட்டுமே எடுக்க முடியும்.
மருத்துவச் சிகிச்சை, திருமணம், குழந்தைகளுக்கான உயர் கல்வி போன்ற சிலக் காரணங்களுக்காக சிறிதளவு பணத்தை எடுக்கலாம்.
பகுதி அளவு பணத்தை 3 முறை மட்டுமே எடுக்கலாம். அவ்வாறு எடுக்கும்போது இடையில் 5 ஆண்டுகள் இடைவெளி இருத்தல் வேண்டும் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பென்சன் தொகை உயரும்
இதனால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000 என்றால் அதற்கான பென்சன் தொகை ரூ.15,000லிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. இந்நிலையில்,இந்த வரம்பை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கான தீர்ப்பு ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்தால் பென்சன் பணம் ரூ.8571 ஆக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும் பென்சன் தொகை 15000 ரூபாயிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இருப்பினும், வரைமுறை செய்யப்பட்ட அடிப்படை சம்பளம் ஒருவேளை 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் பென்சன் தொகை இன்னும் அதிகரிக்கும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக இருந்தாலும் அதற்கான பென்சன் தொகை ரூ.15,000லிருந்து கணக்கிடப்படுவதால் இது ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அடிப்படை சம்பள வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்சன் கிடைக்கும்.
ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திருத்தத் திட்டத்தை மத்திய அரசு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அமல்படுத்தியது. இதற்கு தனியார் துறை ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து EPFO அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
நாசாவின் அடுத்த பிரம்மாண்ட திட்டம்.. விண்வெளி வீரர்களுக்கு வித்தியாச பயிற்சி.. - வைரல் புகைப்படம்..!
தொடர்புடைய செய்திகள்
- அவங்க கேட்பதை கொடுங்க... ஆதார், ரேஷன் கார்டு தேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
- ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அப்படி என்ன அவசரம்? அரசியல் உள்நோக்கமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
- PF புதிய விதிகள்: இத உடனே செஞ்சிடுங்க… இல்லன்னா EPF பலன் எதுவும் கெடைக்காது..!
- சட்டத்தோட 'ஓட்டை' வழியா தப்பிச்சிடுவாங்க...! 'அந்த மாதிரி' சொல்றது ரொம்ப அபத்தம்... ஸோ 'அதுவும்' போக்சோல தான் வரும்...! - உச்சநீதிமன்றம் அதிரடி...!
- உங்க 'உயிரோட' நாங்க விளையாட விரும்பல...! ஸோ, 'அதெல்லாம்' பண்ண முடியாது...! மீண்டும் 'தடுப்பூசி' போட 'அனுமதி' கேட்ட நபர் - உச்சநீதிமன்றம் அதிரடி...!
- 'நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... அடுத்த கட்டத்திற்குச் செல்லும் விசாரணை!
- 'காணொலிக் காட்சி மூலம்கட்டிலில் படுத்தபடி' வாதாடிய 'வக்கீல்...' 'கடுப்பான நீதிபதி!...' 'வழக்கறிஞருக்கு வார்னிங்...'
- 'கொரோனா' ஒன்றும் 'பெருந்தொற்று' இல்லை... சொன்னது 'உச்சநீதிமன்ற' நீதிபதி... 'நம்ம நாடு இல்லை...'
- 'வக்கீல்களின் கருப்பு கோட்டிற்கு கொரோனாவால் வந்த ஆபத்து'... சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு!
- ‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி?’...