‘அடித்தது யோகம்!’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்!.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினருக்கான சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வை டிசம்பர் 1 முதல் அமல்படுத்துகிறது Wipro.

பெங்களூரு முக்கிய ஐடி நிறுவனமான விப்ரோ, பி 3 மற்றும் அதற்குக் கீழாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒற்றை இலக்க சம்பள உயர்வு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மூத்த ஊழியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது குறித்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

​​இந்தியாவின் 4வது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி நிறுவனமான விப்ரோவின் ஊழியர்கள் இன்னும் அதிகரிப்பார்கள் என்றும்,  தமது நிகர லாபத்தில் ஆண்டு சரிவில் 3.4% ஆண்டை சந்தித்துள்ள விப்ரோ நிறுவனம், அந்த இழப்பு இருந்தபோதிலும், சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

இதுபற்றி விப்ரோ நிறுவனம், “எங்கள் ஊழியர்கள் தடை அற்ற பொருளாதார நிலையை உறுதி செய்யவும், இந்த சவாலான காலங்களில் சிறப்பான பணியை தந்து தரத்தை பராமரிக்கவும் செய்துள்ளனர். அதில் அதீத செயல் திறனுடன் பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுகளுடன் சம்பள அதிகரிப்புகள் இருக்கும்.” என்று கூறியுள்ளது.

முன்னதாக, விப்ரோ கிட்டத்தட்ட 90% ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிவதை 2021 ஜனவரி 18 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்