ரயிலுக்குள் இருந்த மர்ம பெட்டி.. உள்ள இறந்த நிலையில் இளைஞர்?.. "அவரு கழுத்துல இருந்து தான்".. திகிலூட்டும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாட்னாவுக்கு வந்த ரயில் ஒன்றில் இருந்த மர்ம பெட்டி ஒன்றை திறந்து பார்த்த போது அதற்குள் இருந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா பகுதி இடையிலான இன்டர்சிட்டி ரயில் ஒன்று டானாபூர் பிரிவில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
அந்த சமயத்தில் இந்த ரயிலுக்குள் பொது பெட்டியில் மூடிய நிலையில் மர்ம இரும்பு பெட்டி ஒன்று இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் கடும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ரயிலுக்குள் மர்ம இரும்பு பெட்டி ஒன்று இருந்தது பற்றி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இரும்பு பெட்டியை கைப்பற்றி விசாரணையும் மேற்கொண்டனர். அப்படி இருக்கையில், அந்த பெட்டியை திறந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அந்த இரும்பு பெட்டிக்குள் இளைஞர் ஒருவரின் உடல் இருந்தது, அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. போலீசார் மத்தியிலும் இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்த சூழலில் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, ரயில் பிளாட்ஃபார்மை அடைந்த போது அதில் இருந்த மர்ம இரும்பு பெட்டி மீது போலீசாருக்கு சந்தேகம் உருவாகி உள்ளது. மேலும் அந்த பெட்டி மிகவும் கனமாக இருந்ததால் அதன் பூட்டை போலீசார் உடைத்து பார்த்துள்ளனர். அதில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் மடக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது.
மேலும் அந்த உடலின் கழுத்தில் கயிறும் இருந்த சூழலில், கழுத்தை நெரித்து கொன்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் வந்த இரும்பு பெட்டி ஒன்றில், இளைஞரின் உடல் இருந்த சம்பவம் பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் ஸ்டாலின் சென்ற ரயில் பாதியில் நிறுத்தம்.. அபாய சங்கிலியை பெண் இழுத்ததால் பரபரப்பு..!
- "எப்ப வழியனுப்ப வந்தாலும் அப்பா இப்படித்தான்".. மகன் பகிர்ந்த எமோஷனல் வீடியோ..!
- யாரு சாமி இவரு?.. மெட்ரோ ரயிலுக்கு சமமா ஓடிய நபர்.. நெட்டிசன்களை மிரள வச்ச வீடியோ..!
- கால் ஸ்லிப் ஆகி.. ரயில் நடைமேடை இடையே சிக்கிய பெண்.. மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் காத்திருந்த துயரம்!!
- “யாரு சாமி இவங்க” .. ஓடும் ரயில்ல ஓட்டைய போட்டு எண்ணெயை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. வீடியோ..!
- ரயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த பயணி.. "திடீர்ன்னு ஜன்னல உடைச்சுக்கிட்டு வந்த கம்பி".. ஒரு நிமிடத்தில் நடந்த மரணம்!!
- ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!
- புனே நெடுஞ்சாலை விபத்தை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து.. என்ன நடந்தது?
- "வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!
- பூட்டிய ரயில் கழிவறைக்குள் சடலமாக கிடந்த நபர்.. 900 கிமீ கடந்த பிறகு தெரிய வந்த உண்மை!!.. குலை நடுங்கிப்போன பயணிகள்