"முதல் தடவை இந்தியாவுல இது சிக்கிருக்கு".. மோப்ப நாய் கூட கண்டுபிடிக்க முடியாதாம்.. ஏர்போர்ட் அதிகாரிகளை அதிரவைத்த பயணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருளை கடத்திவந்த பொலிவியாவை சேர்ந்த பயணியை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இருப்பினும் கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பொலிவியாவில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த பயணி கொண்டுவந்த பையில் பிளாக் கொக்கைன் (Black Cocaine) என்னும் போதைப்பொருள் இருந்திருக்கிறது. 

இதனையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்னர், அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், அது Black Cocaine தான் சோதனை மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

பரிசோதனை

இதுகுறித்து பேசிய NCB-ன் மும்பை மண்டல இயக்குநர் அமித் கவாட், "தென் அமெரிக்கப் பிரஜை ஒருவர் போதை பொருளோடு விமானம் மூலம் மும்பைக்கு வருவதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பொருட்களை முழுமையாக சோதனை செய்ததில் பைகளில் ரகசிய இடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்து 12 பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. பாக்கெட்டுகளை சோதனை செய்தபோது, ​​கருப்பு நிற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அது Black Cocaine தான் எனத் தெரியவந்தது" என்றார்.

கைது

மேலும், முதல்முறையாக இது இந்தியாவில் சிக்கியிருப்பதாக தெரிவித்த அவர், இதனை மோப்ப நாயால் கூட கண்டுபிடிக்க முடியாது என்றார். வழக்கமான கொக்கைனுடன், வாசனை தெரியாமல் இருக்க கரியை அதில் சேர்த்து இந்த பொருள் உருவாக்கப்படுவதாகவும், தென் அமெரிக்க நாடுகளில் இந்த போதைப்பொருள் அடிக்கடி பிடிபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், அந்த பயணியுடன் சேர்ந்து இந்த கடத்தலுக்கு உதவிய நைஜிரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

MUMBAI, AIRPORT, NCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்