வித்தியாசமா நடந்துக்கிட்ட பயணி.. செக் பண்ணதும் அதிர்ந்த அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இதன் காரணமாக விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

Advertising
>
Advertising

Also Read | பெற்றோர் ரோடு போடும் தொழிலாளர்கள்.. மகள் இந்திய அணியின் கேப்டன்.. விடாமுயற்சியால் வறுமையை வீழ்த்திய அஸ்தம் ஓரான்..!

கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதுபோன்ற கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில், நேற்று கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். விமானத்தை விட்டு இறங்கியதும் சந்தேகத்திடமாக அந்த பயணி நடந்துகொண்ட நிலையில், அவரை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது, தனது மலக்குடலில் வைத்து 1066.75 கிராம் எடையுடைய தங்கத்தினை கடத்திவந்தது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து தங்கத்தினை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு

இதனிடையே கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடந்த முயன்ற 4 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 3.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பயணிகள் பல வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, கடந்த 7 ஆம் தேதி கேரளாவில் உள்ள கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, அவர் சுமார் 700 கிராம் மதிப்புள்ள தங்கத்தை மலக்குடலில் வைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து மருத்துவர்கள் உதவியுடன் அதனை வெளியே எடுத்த அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்திருக்கின்றனர். இப்படி, அடுத்தடுத்து தங்கம் கடத்தி வந்த பயணிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது கேரளா முழுவதிலும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | எப்பவும் இளமையா இருக்கணும்.. மர்ம பூஜைக்கு அப்புறம் தம்பதி செஞ்ச வேலை.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

KERALA, AIRPORT, PASSENGER, GOLD, KOCHI AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்