‘களைகட்ட துவங்கியது பாஜக அலுவலகம்’!.. கொண்டாடத்தில் தொண்டர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

மேலும், நாடு முழுவதும் மோடி அலை ஓயவில்லை என்று பாஜக தொண்டர்கள் கூறி வருகின்றனர். இதனையடுத்து, தற்போதைய நிலவரப்படி பாஜக 300 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தொண்டர்கள் அவர்களின் கட்சி அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் “மீண்டும் மோடி வேண்டும் மோடி” என்ற முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

LOKSABHAELECTIONRESULTS2019, ELECTIONRESULTS2019, VOTECOUNTING, BJP, HEAD OFFICE, PARTY WORKERS, CELEBRATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்