'உயிருக்கு போராடும் 16 வயது சுட்டி மகளுக்கு'.. கிட்னி தர மறுக்கும் பெற்றோர்.. நடுங்க வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகாரின் ஷேய்க்புரா மாவட்டத்தில் உள்ளது அவ்ஜிலி கிராமம். இங்குள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 16 வயது சிறுமியான கஞ்சன் குமாரி, மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பதற்காக அண்மையில் தேர்வு எழுதி முதலிடம் பெற்றுள்ளார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே எல்லாவற்றுக்கும் பாதகமாக, சிறுமிக்கு கிட்னி பாதிக்கப்பட்டதால், முதலில் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கான பிரச்சனையை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாததால், பீகாரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சிறுமிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில், சிறுமிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்ததாக தெரிவித்ததோடு, உடனடியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று கூறியுள்ளனர்.

ஆனால் சிறுமிக்கு மாற்று கிட்னி கிடைக்கவில்லை. இதையெல்லாம் விட கொடுமை, , சிறுமியின் அதே ரத்தப் பிரிவு கொண்ட, சிறுமியின் பெற்றோரே சிறுமிக்கு கிட்னி தர முன்வரவில்லை என்பதுதான். அரசின் மருத்துவ நிதி உதவி பெற்றேனும் சிறுமியைக்கு கிட்னி ஏற்பாடு செய்து, காப்பாற்றலாம். ஆனால் அதைச் செய்யவும் சிறுமியின் பெற்றோர் முன்வரவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, சிறுமி ஒரு பெண் என்பதால், ‘அவள் ஒரு பெண். அவளுக்கு யார் கிட்னி தருவார்கள்’ என்று சிறுமியின் தந்தை ராமாஷ்ரே யாதவ் தெரிவித்ததாகவும், அப்பகுதியில் இன்னும் பெண் குழந்தைகள் பிறப்பதையும் சமூகத்தில் வளர்ந்து ஆளாவதையும் விரும்பாத மனநிலையுடன் மக்கள் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சிறுமியின் தந்தை அவ்வாறு கூறியது உண்மைதானா என்பது ஒருபுறம் இருக்க, அப்படியானால், ‘நான் தருகிறேன்.. சிறுமியின் ரத்தப் பிரிவுடன் என் ரத்தம் ஒத்துப் போனால்’ என்று இணையவாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

BIHAR, GIRL, KIDNEY, MEDICAL, TREATMENT, SAD, PARENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்