கொரோனா 'தனிமை'... 'அப்பா','அம்மா' அசந்த 'நேரம்' பாத்து... '11 மாத' குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த சாலச்சேரி பகுதியை சேர்ந்த தம்பதியர் முஹம்மது ஷாபிக் - லியானா. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
முஹம்மது ஷாபிக் உறவினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஷாபிக் மற்றும் லியானா ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அவரது 11 மாத ஆண் குழந்தை தனியாக விளையாடியுள்ளது. சிறிது நேரம் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானதை தொடர்ந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையை இருவரும் தேடிய போது, அங்கிருந்த தண்ணீர் வாளி ஒன்றில் குழந்தை மிதப்பதை கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள், உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், நீரில் மூழ்கி குழந்தை இறந்து போனதை உறுதி செய்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற தகவலறிந்து வந்த கேரளா சுகாதாரத்துறையினர், உடனடியாக அடக்கம் செய்ய வேண்டி குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் குழந்தையை தொட்டு தூக்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை உடனடியாக தனிமைப்படுத்தி அந்த தனியார் மருத்துவமனையையும் சீல் வைத்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளை கண்ணெதிரில் விளையாட அனுமதிக்க வேண்டும். அதே போல குழந்தைகள் விளையாடும் வகையில் தண்ணீர் வாளி மற்றும் தொட்டி இருப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்!".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!
- பாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன?... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்!
- 'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'
- 'வீட்ல எலி தொல்ல ஜாஸ்தியா இருக்கு!'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு!.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்!.. பதறவைக்கும் பின்னணி!
- 'ஏமாத்தி உள்ள வந்துடலாம்னு நினைக்காதீங்க!'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை!.. கேரளாவில் திடீரென கொரோனா எகிறியது எப்படி?
- 2-வது முறையாக 'கடித்த' விஷப்பாம்பை... தோண்டி எடுத்து 'பிரேத' பரிசோதனை... என்ன காரணம்?
- கழுத்தில் விழுந்த 'பலாப்பழம்'... சிகிச்சைக்காக 'மருத்துவமனை' சென்றவருக்கு... பரிசோதனையில் உறுதியான 'கொரோனா' !
- மொத தடவ 'என்கிட்ட' இருந்து தப்பிச்சுட்டா... அதனால தான் 2-வது டைம் என் 'கண்ணு' முன்னாடியே... வெளியான 'திடுக்' தகவல்கள்!
- 'டோன்ட் ஒரி, மாஸ்க் போட்டாலும் யாருன்னு தெரிஞ்சிரும்'... 'மாஸ்க்கை மாஸாக மாற்றிய கேரள கலைஞர்'... குவியும் ஆர்டர்!
- 'பங்கு இதுக்க மேல பொறுக்க முடியாது'... 'கோதாவில் குதித்த இளைஞர்'... கல்யாணம் முடிஞ்சும் அவரவர் வீட்டுக்குப் போன தம்பதி!