27 வருஷமா பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்.. முதல் சந்திப்புல நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. !
முகப்பு > செய்திகள் > இந்தியாபாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 27 வருடங்களாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி வருகிறார். பிரதமருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு குறித்தும் மனம் திறந்திருக்கிறார் இவர்.
ரக்ஷாபந்தன்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பண்டிகைகள் கொண்டாப்படுக்கின்றன. அந்த வகையில் வட இந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற பண்டிகைகளில் ஒன்று தான் இந்த ரக்ஷாபந்தன். இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு வண்ண கயிறை கையில் கட்டுகின்றனர். இதனை ராக்கி என்று அழைக்கின்றனர். மேலும், மனதுக்கு நெருக்கமான ஆண்களை தங்களது சகோதரர்களாக பாவித்து அவர்களது கையிலும் இந்த ராக்கியை பெண்கள் கட்டுகின்றனர். இதனிடையே நேற்று இந்தியா முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தானை சேர்ந்தவர் கமர் மொசின் ஷேக். இவர் கடந்த 27 ஆண்டுகளாக நரேந்திர மோடிக்கு ராக்கி அனுப்பி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரே தயாரித்த ராக்கியை பிரதமருக்கு அனுப்பிவைத்த அவர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழவும், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று அவர் மீண்டும் பிரதமராகவும் வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,"பிரதமர் மோடிக்கான ராக்கியை ரேஷ்மி ரிப்பன் மூலம் எம்ப்ராய்டரி முறையில் நானே தயாரித்து அனுப்பினேன். பிரதமர் மோடி உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளேன். அடுத்த முறையும் அவர் தான் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்து முறையும் அவர் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். டெல்லி வரும் போது அவரை நேரில் சந்திப்பேன் என் நம்புகிறேன்" என்றார்.
முதல் சந்திப்பு
இந்நிலையில், பிரதமர் மோடியுடனான தனது முதல் சந்திப்பு நிகழ்ந்த விதம் பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர்,"பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான திலீப் சங்ஹானியின் விருந்தினராக நானும் தன் கணவரும் சென்றிருந்தோம். சங்கனி எம்.பி.யாக இருந்ததால் அவருக்கு அரசு அளித்த வீடு இருந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்த நரேந்திர மோடி, புதுதில்லியில் இருந்த சங்ஹானியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்ட போது, என்னிடம் எப்படி இருக்கிறீர்கள் சகோதரி? எனக் கேட்டார் மோடி. அவருடைய வார்த்தைகள் என் இதயத்தை தொட்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சகோதர பிணைப்பு
அதைத் தொடர்ந்து ராக்கி கட்டுவது குறித்து பேசிய ஷேக்,"ரக்ஷாபந்தன் நாளில் ஒவ்வொரு சகோதரியும் தனது சகோதரனுக்கு ராக்கி காட்டுவார் என அறிந்தேன். அப்போது உடனடியாக மோடிக்கு ஒரு ராக்கி கயிறை கட்டினேன். அன்றுமுதல் சகோதர - சகோதரி பிணைப்பு எங்களுக்குள் ஏற்பட்டது. நானும் ஒவ்வொரு வருடமும் ரக்ஷாபந்தன் தினத்தில் அவருக்கு ராக்கி அனுப்பி வருகிறேன்" என்றார் நெகிழ்ச்சியாக.
Also Read | "சின்ன வயசுலேர்ந்து கனவு" - தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குறித்த உருக்கமான தகவல்.!
மற்ற செய்திகள்
"சின்ன வயசுலேர்ந்து கனவு" - தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குறித்த உருக்கமான தகவல்.!
தொடர்புடைய செய்திகள்
- "சில மரபுகள் எப்போவும் மாறாது".. ரக்ஷாபந்தனை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சிறுவயது புகைப்படம்.. அந்த Caption தான் செம்ம..!
- "ஆத்தாடி, இந்த ராக்கி கயிறு விலை என்ன இவ்ளோ இருக்கு?!.." கேட்டதும் மிரண்டு போகும் சகோதரிகள்..
- CWG 2022: "சாம்பியன்களின் சாம்பியன்".. சாதனை படைத்த பிவி சிந்து.. பிரதமர் மோடி வாழ்த்து..!
- Pooja Gehlot: "தங்கம் வெல்ல முடியல.!" - மன்னிப்பு கேட்ட பூஜா.. "மன்னிப்புலாம் கேட்காதீங்க".. பிரதமர் மோடி உருக்கமான ஆறுதல்.!
- 24 கேரட் தங்கத்துல ஸ்வீட்.. விலையை கேட்டு மார்க்கெட்டே கலகலத்து போயிடுச்சு..
- "கொரோனா தடுப்பூசி போட்டிங்களா.?.. வாங்க Free ஆ சாப்பிடலாம்".. பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட நபரின் அடுத்த அறிவிப்பு.. ஆஹா என்ன மனுஷன்யா..!
- "சென்னை நினைவுகள்.. மறக்க முடியாத பயணம்".. நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
- இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. பொதுமக்களுக்கு டிராஃபிக் போலீசார் கொடுத்த அட்வைஸ்..!
- "நான் யாரு தெரியுமா?.." 5 வயது சிறுமியிடம் பிரதமர் கேள்வி.. பதில் கேட்டு அவரே சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு
- 1 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சுஷோவன் மறைவு.. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி..கலங்கிப்போன பொதுமக்கள்..!