‘பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள், உங்களோட சேர்ந்து.... வைரலாகும் பாக்கிஸ்தான் பிரதமரின் ட்விட்’!
முகப்பு > செய்திகள் > இந்தியா17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வந்தது
மேலும், நாடு முழுவதும் மோடி அலை ஓயவில்லை என்று பாஜக தொண்டர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து, தற்போதைய நிலவரப்படி பாஜக 300 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்நிலையில், பல நாட்டை சேர்ந்த தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், ‘பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்நிலையில், தொடர்ந்து ஆசியாவின் வளர்ச்சிக்காகவும், அமைத்திக்காகவும் நாம் சேர்ந்து பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவு’.. விரக்தியில் தனியாக வெளியேறிய வேட்பாளர்!
- 'இம்முறையாவது எதிர்கட்சித் தலைவர் ஆவாரா ராகுல் காந்தி?'...
- படுதோல்வி அடைந்த பாஜக.. ஒருத்தருக்குக் கூடவா வெற்றி இல்ல ஒரு மாநிலத்துல..?
- “இதோ சிதம்பரம் தொகுதியின் கள நிலவரம்’! முன்னிலையில் யார்”?.. வெற்றி வாகைசூடப்போவது யார்?
- வாழ்த்துக்கள்!.. ‘சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கோம்’.. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர்!
- 'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்!
- 'ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவு!
- ‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ மோடியின் கிண்டலை மீறி ஆட்சியை நோக்கி மக்கள் முதல்வர்..
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- 'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!