'காஷ்மீர்ல போராடுறாரு'... 'ஆபாச நடிகர் 'ஜானி சின்ஸின்' பட காட்சி ட்வீட்'... 'நீங்க பெரிய ரசிகரா'? ... நெட்டிசன்கள் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகர் ஜானி சின்ஸின் புகைப்படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ட்விட் செய்துள்ள சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச நாடுகளின் உதவியை நாடிய நிலையில், அதற்கு எந்த நாடும் உதவ முன்வரவில்லை. இறுதியாக சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் முறையிட்டது.

அதற்கு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதையடுத்து பாகிஸ்தான் அரசும், அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மோசமாக இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார்கள். போருக்கு நாங்கள் தயாராக இருப்பதாக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மேலும் 125-150 கிராம் அளவுக்கு அணுகுண்டுகள் போதும் இந்தியாவை தகர்பதற்கு, என பாகிஸ்தான் அமைச்சர் பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் காஷ்மீர் போராட்டக்காரர் என ஆபாச நட்சத்திரத்தின் படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ட்விட் செய்துள்ளார். இது கடுமையான சர்ச்சைக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. ''ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரி டுவிட் செய்து காஷ்மீரைச் சேர்ந்த யூசுப்க்கு, பேலட் குண்டுகளால் பார்வை போனது, எனவே அவருக்கு குரல் கொடுங்கள் என்று கூறி படத்தை ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே அந்த ட்விட்டை சிறிது நேரத்தில் அவர் நீக்கிவிட்ட போதிலும், அது நெட்டிசன்கள் கையில் சிக்க தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசிதை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

JAMMUANDKASHMIR, PAKISTAN, PORN, ADULT FILM ACTOR, KASHMIRI MAN, JOHNNY SINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்