கூகுள் CEO சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த 2022 ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்தவரும் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதெள்ளா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவலா, பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

GOOGLE, MICROSOFT, SUNDARPICHAI, SATYANADELLA, PADMAAWARDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்