'பத்ம' விருதுகளை அறிவித்தது 'மத்திய அரசு'... தமிழகத்தில் யார் யாருக்குத் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, ஒன்பது பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதில் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 7 பேருக்கு பத்ம விபூஷண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட இருக்கிறது.

பத்ம விபூஷன் விருதுகள் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உட்பட 7 பேருக்கு வழங்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்கான பத்ம பூஷன் விருது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வழங்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் பத்மபூஷன் விருது புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

PADMA AWARDS, ANNOUNCED, 141 PEOPLE, ARUN JAITLY, SUSHMA SWARAJ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்