'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு இருக்கும் நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழியின் வீட்டிற்கு திடீரென சென்ற வருமானத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சோதனையின் பிறகு, கனிமொழியின் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதால் சோதனை நிறுத்திக் கொள்ளப்பட்டது. இது பற்றிபேசிய கனிமொழி, இரண்டு மணி நேரமாக தேடினார்கள். ஆனால் அவர்களுடைய ஆசை நிராசையாகிவிட்டது. அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கனிமொழி கூறியதோடு இதற்கெல்லாம் திமுக அஞ்சாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி பேசும்போது,  ‘இதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தர்ராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கும் போது, அவர்களின் வீட்டுக்கெல்லாம் ரெய்டு போகாதது ஏன்?’ என்றும்‘பணப்பட்டுவாடா நிகழ்வது போன்று வீடியோக்கள் நிறையவே வருகின்றன. ஆளுங்கட்சியினரே இதை செய்கின்றனர். ஆனால் அவர்களின் மீதான எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லையே ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2019  தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில்  முக்கிய அடையாளமே தேர்தல் ஆணையத்தின்  எதேச்சதிகார, பாரபட்ச நடவடிக்கைகளை ஆகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதே சமயம், தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ இது பற்றிய விளக்கத்தை அளிக்கும் பொழுது, ‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த செல்போன் அழைப்பில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் கனிமொழி  ‘வீட்டுக்கு ரெய்டு சென்றதாகவும், ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிரான கேள்வியை எழுப்பும் வகையில் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அது எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்