'இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக'... 'கோவிஷீல்டு தடுப்பூசியை கொண்டுவர முயற்சி?!!'... 'முக்கிய விவரங்களை பகிர்ந்த சீரம் CEO!!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்காக மத்திய அரசின் அனுமதியை கோர உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் உரிமத்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி சீரம் இந்தியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து பேசியுள்ள சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவல்லா, "மத்திய அரசு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 30 - 40 கோடி டோஸ்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கிறோம். இதற்கிடையே தடுப்பூசியை உடனடியாக அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்காக அனுமதி பெற இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்க உள்ளோம். மேலும் தடுப்பூசி பயன்பாட்டில் உள்நாட்டு பயன்பாட்டுக்கு முன்னிரிமை வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்