'பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எந்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்???' - வெளியான அதிரடி அறிவிப்பு!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பது குறித்த முக்கிய தகவலை சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் பணியில் இந்தியா உட்பட பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவை தடுக்க கூட்டாக 'கோவிஷீல்டு' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

இதையடுத்து இந்த தடுப்பூசியின் 2வது மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஒரே நேரத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பையும், உலக சுகாதார நிறுவனத்தையும் நாட முயற்சி செய்கிறது. இதனால் நேரம் மிச்சமாகும் சூழலில், இதெல்லாம் சரியாக நடந்து விட்டால் மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கிவிடும் எனவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி திரளான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும் எனவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அந்நிறுவன செயல் இயக்குனர் சுரேஷ் ஜாதவ், "கொரோனா தடுப்பூசிக்கான 2வது மற்றும் 3வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகளின் அடிப்படையில் சரியான மருந்தின் உற்பத்தி தொடங்கப்பட்டு, தலைமை மருந்து கட்டுப்பாட்டளரின் அனுமதி கிடைத்ததும், டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்கவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்