'இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ள முதல் தடுப்பூசி'... 'தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வரவுள்ள முதல் தடுப்பூசி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்டிராஜெனெகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணியை சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள தடுப்பூசி பலகட்ட சோதனைகளுக்கு பிறகு மனிதர்களின் உடலில் செலுத்தப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய, அஸ்டிராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து புனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஒப்பந்தம் போட்டது. இந்நிலையில், 3ஆம் கட்ட பரிசோதனையில் நாடு முழுவதும் சுமார் 17 இடங்களில் 1600 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சைடஸ் காடிலாவின் தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் முதலிரண்டு கட்டங்களை மட்டுமே எட்டியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள முதல் தடுப்பூசியாக ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்'... 'வேகமாக பரவும் புதிய வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்!'...
- தமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை!! இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்!
- அமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு!
- தளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்!'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்!
- 'தடுப்பு மருந்து வேணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா!? 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது!'.. சீரம் நிறுவனம் பரபரப்பு கருத்து!
- 'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்!'...
- 'சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு'... 'முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா?'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்!'...
- ‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்!’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’! - தமிழக அரசு!
- ‘120 பேர் பலி!’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரம்!
- 'ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 3 தடுப்பூசிகள்...' இந்திய மக்களுக்கு எப்போது தான் கிடைக்கும்...? - உச்சக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...!